பாட்டாளிக் கட்சி எம்.பி.க்கு இரண்டாவது குழந்தை

பாட்டாளிக் கட்சி எம்.பி.க்கு இரண்டாவது குழந்தை

1 mins read
a690f3c0-a1f5-4265-93a9-76d34596cd39
-

பாட்டாளிக் கட்சியின் செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கானுக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. தமது ஃபேஸ்புக் பதிவில் இதனை இன்று அவர் அறிவித்தார்.

"குழந்தை அய்லாவுக்கு நாங்கள் பெருமைக்குரிய பெற்றோர்! உங்களது அன்பார்ந்த வாழ்த்துகளுக்கு நன்றி," என்று அவர் பதிவிட்டார்.

திருமதி ரயீசா கான், இந்த வாரம் குழந்தை பெற்றுள்ள இரண்டாவது செங்காங் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராவார்.

சக உறுப்பினர் ஹி டிங் ரு, தமக்கு மூன்றாவது குழந்தை பிறந்துள்ளதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்திருந்தார்.