கடல்துறை ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை கடுமையாக்கப்படுகிறது

கடல்துறை ஊழியர்களுக்கு கொவிட்-19 பரிசோதனை கடுமையாக்கப்படுகிறது

1 mins read
09d433d7-7a73-493b-ac4f-2f5f8ccb599a
-

கரையில் பணிபுரியும் கடல்துறை ஊழியர்கள், பணிக்காக கப்பல்களில் ஏற அனுமதிக்கப்படுவதற்கு முன்னதாக 14 நாட்களுக்குப் பதிலாக ஏழு நாட்களுக்கு ஒருமுறை கொரோனா கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

கடல்துறை நில அளவையாளர், துறைமுக விமானி ஆகிய இருவருக்கு அண்மையில் கொவிட்-19 தொற்று உறுதியானதைத் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த ஏற்பாடு அமைவதாக கடல்துறை, துறைமுக ஆணையம் இன்று தெரிவித்தது.

இன்று தொடங்கி இம்மாதம் 8ஆம் தேதி வரை கரையில் பணிபுரியும் 20,000க்கும் அதிகமான ஊழியர்கள் 'பிசிஆர்' பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். இந்நிலையில், கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட அந்த இரு கடல்துறை ஊழியர்கள் தொடர்பில் கொவிட்-19 பாதுகாப்பு நடைமுறைகள் மீறப்பட்டனவா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

"தொற்று உறுதி செய்யப்பட்ட அந்தக் கடல்துறை நில அளவையாளர், கடந்த ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி தொற்று உறுதியான கடல்துறை சேவைப் பொறியாளரைப்போலவே கப்பல்களில் மற்ற சிப்பந்திகளுடன் சேர்ந்து உணவு அருந்தியதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

"இந்தச் செயல், முன்னெச்சரிக்கை நடைமுறைகளுக்கு எதிரானது," என்று ஆணையம் கூறியது.