செந்தோசா தீவில் உள்ள சில சுற்றுலாத் தலங்கள் கடந்த டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுவிட்டன.
இதனால், நுழைவுச்சீட்டுகளை வாங்கியும் தாங்கள் செல்ல விரும்பும் நேரத்தைப் பதிவு செய்யாததால் பல வாடிக்கையாளர்களால் அவற்றைப் பயன்படுத்த முடியவில்லை. சிலர் அங்கு சென்ற பிறகு கூட திருப்பி அனுப்பப்பட்டனர்.
வாடிக்கையாளர்களில் சிலர் நுழைவுச்சீட்டுகளுக்கான பணத்தைத் திருப்பிப் பெற முற்பட்டனர். ஆனால், அவ்வாறு பணத்தைத் திரும்பப் பெற சில நிபந்தனைகள் இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எவ்வாறு பணத்தைத் திருப்பிப் பெறுவது?
செந்தோசாவில் அனைத்து நுழைவுச்சீட்டுகளுக்கான பணம் திரும்ப வழங்கப்படாது. என்றாலும், சூழ்நிலையையும் காரணங்களையும் பொறுத்து வாடிக்கையாளர்களுக்குப் பணம் திருப்பித் தரப்படலாம்.
'யூனிவர்சல் ஸ்டூடியோஸ் சிங்கப்பூர்', 'சீ அக்குவேரியம்' ஆகிய சுற்றுலாத் தலங்களுக்கான நுழைவுச்சீட்டுகளுக்கான பணம் திருப்பித் தரப்படாது. ஆனால், வாடிக்கையாளர்கள் தங்களது வருகை நாளை மாற்ற கோரலாம்.
'சிங்கப்பூரை மீண்டும் ரசிப்பதற்கான பற்றுச்சீட்டு'த் திட்டத்தின் மூலம் வாங்கப்படும் நுழைவுச்சீட்டுகளுக்கான பணம் திருப்பித் தரப்படாது.
இத்தகைய பிரச்சினைகளை எவ்வாறு தவிர்ப்பது?
சுற்றுலாத் தலங்களுக்குச் செல்ல விரும்புவோர் நுழைவுச்சீட்டுகளை வாங்கும்போது கீழ்க்கண்ட குறிப்புகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் பயனீட்டாளர் சங்கம் கூறுகிறது:
- நுழைவுச்சீட்டுகளை வாங்குவதற்கு முன்னர் சம்பந்தப்பட்ட சுற்றுலாத் தலத்திற்குச் செல்ல நேரத்தைப் பதிய வைக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
தொடர்புடைய செய்திகள்
- நுழைவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி எந்தெந்த சுற்றுலாத் தலங்களுக்குச் செல்லலாம் என்பதைச் சரிபார்க்க வேண்டும்.
- தீர்வு காணப்படாத சச்சரவுகள் குறித்து வாடிக்கையாளர்கள் பயனீட்டாளர் சங்கத்தைத் தொடர்புகொள்ளலாம்.