செந்தோசா நுழைவுச்சீட்டுகள்: பணத்தைத் திரும்பப் பெறுவதில் நிபந்தனைகள்

செந்­தோசா தீவில் உள்ள சில சுற்­று­லாத் தலங்­க­ளுக்­குச் செல்­வ­தற்­கான முன்­ப­திவு கடந்த டிசம்­பர் மாதம் கடைசி வாரத்­தில் முடி­வ­டைந்­தது. இத­னால், நுழை­வுச்­சீட்­டு­களை வாங்­கி­யும் பல வாடிக்­கை­யா­ளர்­க­ளால் அவற்­றைப் பயன்­ப­டுத்த முடி­ய­வில்லை. கார­ணம், தாங்­கள் செல்­ல­வி­ருக்­கும் நேரத்தை அவர்­கள் குறிப்­பி­ட­வில்லை.

வாடிக்­கை­யா­ளர்­களில் சிலர் நுழை­வுச்­சீட்­டு­க­ளுக்­கான பணத்­தைத் திருப்­பிப் பெற முற்­பட்­ட­னர். ஆனால், அதில் சில நிபந்­த­னை­கள் உண்டு.

நான் எவ்வாறு பணத்தைத் திரும்பப் பெறலாம்?

செந்­தோ­சா­வில் அனைத்து நுழை­வுச்­சீட்­டு­க­ளுக்­கான பணம் திரும்ப வழங்­கப்­ப­டாது. என்­றா­லும், சூழ்­நி­லை­யை­யும் கார­ணங்­களை­யும் பொறுத்து வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்­குப் பணம் திருப்­பித் தரப்­ப­ட­லாம்.

'யூனி­வெர்­சல் ஸ்டூ­டி­யோஸ் சிங்­கப்­பூர்', 'சீ அக்­கு­வே­ரி­யம்' ஆகிய சுற்­று­லாத் தலங்­க­ளுக்­கான நுழை­வுச்­சீட்­டு­க­ளுக்­கான பணம் திரும்பத் தரப்­ப­டாது. ஆனால், வாடிக்­கை­யா­ளர்­கள் தங்­க­ளது வருகை நாளை மாற்ற கோர­லாம்.

'சிங்­கப்­பூரை மீண்­டும் ரசிப்­பதற்­கான பற்­றுச்­சீட்டு'த் திட்­டத்­தின் மூலம் வாங்­கப்­படும் நுழைவுச்­சீட்­டு­க­ளுக்­கான பணம் திருப்பித் தரப்­ப­டாது.

என்னை நான் எப்படி பாதுகாத்துக்கொள்ள முடியும்?

சுற்­று­லாத் தலங்­க­ளுக்­குச் செல்ல விரும்­பு­வோர் நுழை­வுச்­சீட்­டு­களை வாங்­கும்­போது கீழ்க்­கண்ட குறிப்­பு­க­ளைக் கவனத்­தில் கொள்ள வேண்­டும் என்று சிங்­கப்­பூர் பய­னீட்­டா­ளர் சங்­கம் கூறு­கிறது:

 நுழை­வுச்­சீட்­டு­களை வாங்­கு­வ­தற்கு முன்­னர் சம்­பந்­தப்­பட்ட சுற்­று­லாத் தலத்­திற்­குச் செல்ல நேரத்­தைப் பதிய வைக்க வேண்­டுமா என்­ப­தைக் கண்­ட­றிய வேண்­டும்.

 நுழை­வுச்­சீட்­டு­க­ளைப் பயன்­படுத்தி எந்­தெந்த சுற்­று­லாத் தலங்­க­ளுக்­குச் செல்­ல­லாம் என்­பதைச் சரி­பார்க்க வேண்­டும்.

 தீர்வு காணப்­ப­டாத சச்­ச­ரவு­கள் குறித்து வாடிக்­கை­யா­ளர்­கள் பய­னீட்­டா­ளர் சங்­கத்­தைத் தொடர்பு­கொள்­ள­லாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!