புதிதாக 35 பேருக்கு கிருமித்தொற்று

புதிதாக 35 பேருக்கு கிருமித்தொற்று

2 mins read

சிங்­கப்­பூ­ரில் புதி­தாக 35 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ள­தாக நேற்று அறி­விக்­கப்­பட்­டது.

அவர்­க­ளை­யும் சேர்த்து இங்கு பாதிக்­கப்­பட்­டோர் மொத்த எண்­ணிக்கை 58,697ஆக உயர்ந்­து உள்ளது.

புதி­தாக கிருமி தொற்­றி­ய­வர்­கள் அனை­வ­ரும் வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வர்­கள்.

அவர்­கள் இங்கு வந்­த­வு­டன் வீட்­டில் இருக்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­ட­தாக சுகா­தார அமைச்சு நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் தெரி­வித்­தது. சமூக அள­விலோ வெளி­நாட்டு ஊழி­யர் தங்­கும் விடு­தி­யிலோ புதி­தாக எவ­ருக்­கும் தொற்று உறுதி செய்­யப்­ப­ட­வில்லை.

கிரு­மித்­தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­வர்­களில் அறு­வர் சிங்­கப்­பூ­ரர்­கள் அல்­லது நிரந்­த­ர­வா­சி­கள். எழு­வர் வெளி­நாட்டு இல்­லப் பணிப்­பெண்­கள்.

இதற்­கி­டையே, நேற்று முன்­தினம் 33 பேருக்­குத் தொற்று உறுதி செய்­யப்­பட்­ட­தாக அமைச்சு தெரி­வித்து இருந்­தது. அவர்­கள் அனை­வ­ரும் வெளி­நா­டு­களில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்­த­வர்­கள். அவர்­க­ளுக்­கும் வீட்­டில் இருக்­கும் கட்­டாய உத்­த­ரவு பிறப்­பிக்­கப்­பட்­டது.

அவர்­களில் இரு­வ­ரி­டம் கிரு­மித்­தொற்­றுக்­கான அறி­கு­றி­கள் தென்­பட்­டன.

அந்த 33 பேரில் இந்­தி­யா­வில் இருந்து சிங்­கப்­பூ­ருக்கு வந்த மூன்று வயது சிறு­மி­யும் அடங்­கு­வார்.

அவர் சார்ந்­தி­ருப்­போர் அட்டை வைத்­துள்­ளார். நேற்று முன்­தி­னம் தொற்று உறு­தி­யா­ன­வர்­களில் ஒன்­பது பேர் இல்­லப் பணிப்­பெண்­கள்.

தமது பெற்­றோ­ரைக் காண இந்­தோ­னீ­சி­யா­வில் இருந்து இங்கு வந்த ஒரு பய­ணி­யும் அந்த 33 பேரில் அடங்­கு­வார். அவர் குறு­கி­ய­கால வருகை அட்டை வைத்­துள்­ளார்.

காலி அலு­வ­ல­கத்­தில் ஒன்­று­கூ­டிய 44 பேர் மீது போலிஸ் விசா­ரணை

புத்­தாண்டு தினம் அன்று பூன்லே வே பகு­தி­யில் உள்ள தொழிற்­சாலை கட்­ட­டம் ஒன்­றில் 44 பேர் கொண்ட குழு ஒன்­று­கூ­டி­யது குறித்து போலி­சார் விசா­ரணை நடத்தி வரு­கின்­ற­னர்.

அந்த 44 பேரில் 41 பேர் சிங்­கப்­பூ­ரர்­கள், ஒரு­வர் நிரந்­த­ர­வாசி, ஒரு­வர் மலே­சி­யர், எஞ்­சிய ஒரு­வர் சீன நாட்­ட­வர். புத்­தாண்டு பிறந்து பின்­னி­ரவு 1 மணிக்­குப் பிறகு, காலி­யாக இருந்த அலு­வ­ல­கம் ஒன்றில் அவர்­கள் மது அருந்துதல், புகைப்பிடித்தல், பாடு­வது போன்ற நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட்­ட­னர்.

கொவிட்-19 விதி­மு­றைக­ளின்­கீழ் பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­களை மீறி­ய­தன் தொடர்­பில் அவர்­கள் மீது விசா­ரணை நடத்­தப்­பட்டு வரு­கிறது.

புத்­தாண்டு தினம் பின்­னி­ரவு 1.20 மணிக்கு இந்த ஒன்­று­கூ­டல் இடம்­பெற்­றது குறித்து தனக்­குத் தக­வல் கிடைத்­த­தாக போலிஸ் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தது. அதி­கா­ரி­கள் சம்­பவ இடத்­திற்கு வந்­த­வு­டன் அங்கு 29 ஆட­வர்­கள், 15 மாதர்­கள் ஒன்­று­கூடி இருந்­த­தைக் கவ­னித்­த­னர். அவர்­கள் 17 முதல் 34 வய­துக்கு இடைப்­பட்­ட­வர்­கள்.

அந்­தக் குழு­வி­னர் பழகி, மகிழ்­வதற்­காக ஒன்­று­கூ­டி­ய­தா­க­வும் அந்த இடம், பொதுக் கேளிக்­கை­களுக்­காக உரி­மம் பெற­வில்லை என்­றும் முதற்­கட்ட விசா­ர­ணை­யில் தெரி­ய­வந்­துள்­ள­தாக போலி­சார் தெரி­வித்­த­னர்.

பொதுக் கேளிக்கை சட்­டத்­தின்­கீழ், முறை­யான உரி­ம­மின்றி பொதுக் கேளிக்கை நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்­ளும் குற்­றத்­திற்­காக $20,000 வரை அப­ரா­தம் விதிக்­கப்­ப­ட­லாம். கொவிட்-19 விதி­மு­றை­க­ளின்­கீழ் பாது­காப்பு இடை­வெளி நடை­மு­றை­களை மீறி­ய­தாக குற்­றம் நிரூ­ப­ண­மா­னால் ஆறு மாதங்­கள் வரை சிறை, $10,000 வரை அப­ரா­தம் அல்­லது இரண்­டும் விதிக்­கப்­ப­ட­லாம்.