மாண்டரின் ஆர்ச்சர்ட் ஹோட்டல் திறக்கப்பட்டது

மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் சிங்­கப்­பூர் ஹோட்­டல் நேற்று முன்­தி­னம் மீண்­டும் திறக்­கப்­பட்­டது. வசிப்­பிடத்­தில் தங்­கும் கட்­டாய உத்­த­ரவை நிறை­வேற்­றிய 13 பேரி­டம் கொவிட்-19 நோய்த்­தொற்று உறு­திப்­ப­டுத்­தப்­பட்­ட­தைத் தொடர்ந்து அந்த ஹோட்­டல் 14 நாட்­க­ளுக்கு மூடப்­பட்­டி­ருந்­தது.

அந்த 13 பேரும் பல்­வேறு நாடு­களில் இருந்து சிங்­கப்­பூர் வந்­த­போ­தும் ஒரே மூலத்­தில் இருந்து அவர்­க­ளைக் கிருமி தொற்­றி­ இருக்­கக்­கூ­டும் என்­ப­து பரி­சோ­த­னை­யில் தெரி­ய­வந்து உள்­ளது.

அதை அடுத்து, அந்த ஹோட்­ட­லின் 394 விருந்­தி­னர்­க­ளுக்­கும் 571 பணி­யா­ளர்­க­ளுக்­கும் கிரு­மித்­தொற்­றுப் பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது. கிருமி எவ்­வ­ளவு எளி­தில் பர­வக்­கூ­டி­யது என்­பதை இந்­தச் சம்­ப­வம் நினை­வு­ப­டுத்­தி­யுள்­ள­தாக நிபு­ணர்­கள் கூறி­யுள்­ள­னர். கிருமி தொற்­றிய அந்த 13 பேர் மீதான விசா­ர­ணை­யைத் தான் முடித்­துக்­கொண்டு உள்­ள­தா­க­வும் அவர்­க­ளுக்கு அப்­பாற்­பட்டு அவர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்த வேறு எவ­ருக்­கும் தொற்று உறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்­றும் சுகா­தார அமைச்சு கடந்த வெள்­ளிக்­கி­ழமை கூறி­யது.

"ஹோட்­டல் வளா­கம் முழு­வதும் சுத்­தப்­ப­டுத்­தப்­பட்­டு­விட்­ட­தாலும் விருந்­தி­னர்­க­ளைக் கிருமி தொற்­றும் அபா­யம் இல்லை என்­பது உறு­திப்­ப­டுத்­தப்­பட்ட­தா­லும் மாண்­ட­ரின் ஆர்ச்­சர்ட் ஹோட்­டலை மீண்­டும் திறக்க ஒப்­பு­தல் அளிக்­கப்­பட்­டுள்­ளது," என்று அமைச்சு விவ­ரித்­தது.

எனி­னும், அந்த 13 பேரை எப்­படி கிருமி தொற்­றி­யது என்­பது பற்றி இன்­ன­மும் தெரி­ய­வில்லை. அந்த ஹோட்­ட­லில் பாது­காப்பு விதி­மு­றை­கள் மீறப்­பட்டு இருப்­பது இது­வரை கண்­ட­றி­யப்­ப­ட­வில்லை.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!