கொவிட்-19 சூழல் கற்பித்த வாழ்க்கைப் பாடம்

கொவிட்-19 சூழல் கற்பித்த வாழ்க்கைப் பாடம்

8 mins read
40e46e47-b4ad-4d14-9de1-f55a1dab8c61
-
multi-img1 of 3

2020ஆம் ஆண்டு மறக்க முடியாத ஆண்டாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. உலக மக்கள் அனைவருக்கும் பல கசப்பான அனுபவங்கள், கடுமையான சவால்களைத் தந்த கொவிட்-19 கிருமித்தொற்றின் கோரத் தாண்டவம் அரங்கேறிய ஆண்டு அது. இந்நிலையில், புதிய ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ் முரசின் இளம் செய்தியாளர்கள் கடந்த ஆண்டு தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள், அனுபவங்கள் ஆகியவை பற்றியும் அதிலிருந்து கற்றுக்கொண்ட வாழ்க்கைப் பாடம் பற்றியும் பகிர்ந்துகொள்கின்றனர்.

புதிய இயல்புடன் புதிய ஆண்டை வரவேற்போம்

இர்­‌‌‌ஷாத் முஹம்­மது

எந்த அம்­சத்தை எடுத்­துக்­கொண்­டா­லும் சிறிய அள­வில் மாற்­றங்­களைச் செய்­து­விட்டு ஏதோ பெரிய மாற்­றம் செய்­து­விட்­ட­தாக நினைப் பவர்கள் பலர். வாழ்க்கை நடை­முறை­க­ளாக இருக்­கட்­டும், விழா ஒருங்­கி­ணைப்­ப­தாக இருக்­கட்­டும், வீட்டு வி‌சே­‌‌ஷங்­க­ளாக இருக்­கட்­டும், ஏன் வேலை­கள், பழக்­க­வ­ழக்­கங்­கள், சந்­திப்­பு­கள், விடு­மு­றை­கள், பய­ணங்­கள் என ஒரு­வ­ரின் வாழ்க்­கை­யின் எந்த அம்­சத்­தி­லும் அவ்­வப்­போது சிறி­த­ளவு மாற்­றங்­கள் ஏற்­படும். அல்­லது ஏற்­ப­டுத்­திக்­கொள்­வோம்.

அதற்கு மேல் எந்த ஒரு முயற்சியோ முனைப்போ இருப்­பது அரி­து­தான். ஆனால் அந்த சிந்­த­னை­யையே 2020ஆம் ஆண்டு மாற்­றி­விட்­டது என்று சொன்­னால் அது மிகை­யல்ல. முடி­யாது என்று நினைத்­த­தும் முடி­யும் என்­றா­கி­விட்­டது. வய­தா­கி­விட்­டது இனி என்ன? எப்­படி செய்­தோமோ அப்­ப­டியே இருப்­போம் என்று நினைத்­த­வர்­களும் மாற­வேண்­டி­யி­ருந்­தது. தொன்றுதொட்ட காலம் முதல் இப்­ப­டி­த்தான் இது செய்­யப்­ப­ட­வேண்­டும் என்று இருந்த இயல்­பும் மாற வேண்டிய கட்டாயத் துக்குள்ளானது.

உங்­க­ளைச் சுற்­றிப் பாருங்­கள் உங்­க­ளுக்கே தெரி­யும் சமூ­கம் கண்­டுள்ள மாற்­றங்­கள். சற்று நினைத்­துப்­பா­ருங்­கள் 2020ஆம் ஆண்­டின் முதல் காலாண்டு வரை­யில் எப்­படி இருந்­தோமோ அதற்­கும் தற்­போ­தைய நிலைக்­கும் எவ்­வளவு தூரம் நாம் பய­ணம் செய்து வந்­துள்­ளோம் என்று.

கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் கிட்­டத்­தட்ட 2,000 பேரைக் கொண்டு பிர­ம்மாண்ட திரு­மண ஏற்­பா­டு­கள் நடந்­தன. வேறு யாருக்­கும் இல்லை; எனக்­குத்­தான்.

ஆனால் இன்றோ நிலைமை மாறி­விட்­டது. உற்­றார், உற­வி­னர்­கள், நண்­பர்­கள் அனை­வ­ரும் சூழ திரு­மண வைப­வத்தை நேரில் காண அழைக்­கும் நிலை அப் படியே புரட்­டிப்­போட்­டா­கி­விட்­டது.

விரல்­விட்டு எண்ணி, குறிப்­பிட்ட விருந்­தி­னர்­களை மட்டும் விசே­‌‌ஷத்­திற்கு வரச்­சொல்­லும் இயல்பை இப்­போது ஒன்­றன்­பின் ஒன்­றாக குடும்­பங்­கள் ஏற்­பாடு செய்து நடத்தி­வ­ரு­கின்­ற­ன.

சென்ற ஆண்டு முழு­வ­தும் திரு­ம­ணங்­களை ஒத்­தி­ வைத்­தோர் பலர். இனி­யும் காத்­தி­ருத்­தல் ஆகாது என்று பாது­காப்பு நிர்­வாக நட­வ­டிக்­கை­க­ளின்­படி சிறிய அள­வில் திரு­ம­ணங்­கள், இதர விழாக்­களை ஏற்­பாடு செய்து நடத்த அனை­வ­ரும் மன­த­ள­வில் தயாராகி­விட்­ட­னர்.

நெருக்­க­மா­ன­வர்­க­ளாக இருந்­தும் சுற்­றத்­தில் நடக்­கும் திரு­மணத்­திற்கு அழைப்­புக் கொடுக்­கப்­ப­ட­வில்லை என்­றா­லும் மனக் குறை­யின்றி அதை ஏற்­றுக் கொள்­ளும் மனப்பக்­கு­வ­மும் சமூ­கத்­தில் பெரும்­பா­லா­னோ­ருக்கு வந்­து­விட்­டது என்­று­தான் சொல்­ல­வேண்­டும்.

நிகழ்ச்­சி­கள் என்று வரும்­போது பிரம்­மாண்ட அரங்­கம், திர­ளான கூட்­டம், கண்­க­வர் மேடை அலங் காரம், சிறப்பு விருந்­தி­னர், பொன்­னாடை, மாலை என சில அம்­சங்­கள் இருக்­க­ வேண்­டும் என்­பது வழக்­க­மாக இருந்­தது.

மெய்­நி­கர் உல­கில் நிகழ்ச்­சி­களை நடத்­த­மு­டி­யாது என்று நினைத்­த­வர்­களும் இன்று புதிய இயல்பை ஏற்று அதில் சிறப்­பாக செயல்­பட்டு வரு­கின்­ற­னர். இதுவே மாற்­றம்.

அந்த விதத்­தில் நானும் அண்­மை­யில் மூன்று நாட்கள் சொகு­சுக் கப்­பல் பய­ணம் சென்­று­வந்­தது அற்­பு­த­மான அனு­ப­வ­மாக அமைந்­தது. சிறு வய­தி­லி­ருந்து சொகு­சுக் கப்­ப­லில் பய­ணம் செய்­ய­வேண்­டும் என்ற ஆசை எனக்கு இருந்­தது. ஏதோ அதற்­கான தரு­ணம் இப்­போது கிடைத்த­தில் மகிழ்ச்சி.

கன மழை யுடன், குளிர் காற்­று­டன் புத்­தாண்டு பிறந்­து­விட்­டது. புதிய இயல்பை அர­வ­ணைத்து, புதிய மாற்­றத்­தைத் தழுவி, சவா­லான ஆண்டை வெற்றிக­ர­மா­கக் கடந்­து­வந்த சாத­னை­யா­ளர்­க­ளாக நாம் யாவ­ரும் புதிய ஆண்டை மகிழ்ச்­சி­யாக வர­வேற்­போம்.

நெருக்கடிநிலையிலும் புதிய வேலை

இந்து இளங்­கோ­வன்

கடந்த ஆண்டு பல­ருக்­குக் கடி­ன­மான ஓர் ஆண்­டாக இருந்­தா­லும் எனக்­குப் பல புதிய வாய்ப்­பு­க­ளை­யும் அனு­ப­வங்­க­ளை­யும் தந்த ஆண்­டா­கவே அமைந்­தது.

நிலை­யற்ற காலத்­தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ் முர­சில் செய்­தி­யா­ள­ராக எனது பணி­யைத் தொடங்­கி­னேன். பட்­டக்­கல்­வியை முடித்த பின் சேர்ந்த முதல் முழு­நேர வேலை இது. கடந்த ஆண்டு ஜன­வரியில் வேலை தேடல் தொடங்­கி­ய­போதே கொரோ­னா­வும் கூடவே வந்­தது. கிரு­மித்­தொற்று அதி­க­ரிக்க அதி­க­ரிக்க வேலை கிடைக்­குமா என்ற சந்­தே­க­மும் பதற்­ற­மும் எழ ஆரம்­பித்­தது. மார்ச் மாதம் தமிழ் முர­சு­டன் நேர்­மு­கத் தேர்­வுக்­கான வாய்ப்பு கிடைத்­தது. இரண்டு நேர்­மு­கத் தேர்­வு­கள், எழுத்­துத் தேர்­வு­ எ­னப் பல­வற்­றைக் கடந்து தமிழ் முர­சில் செய்­தி­யா­ள­ராக எனது பணி உறுதி செய்­யப்­பட்­டது. ஏப்­ரல் மாதல் தொடங்­க­விருந்த வேலை கிரு­மித்­தொற்று தந்த நிலை­யற்றதன்­மை­யால் இரண்டு முறை ஒத்­தி­வைக்­கப்­பட்டு இறு­தி­யாக ஜூன் மாதம் தொடங்­கி­யது.

தமிழ் முர­சில் எனது முதல் நாள் கடந்த ஜூன் 3ஆம் தேதி காலை 9 மணி­ய­ள­வில் எனது வீட்­டி­லேயே 'கூகல் மீட்­ஸில்' ஆரம்­பம் கண்­டது. கணினி­யின் சிறிய திரை­யில் பிற செய்­தி­யா­ளர் களை­யும் செய்தி ஆசி­ரி­ய­ரை­யும் சந்­தித்­தேன். ஒவ்­வொரு திங்­கட்­கிழமை நடை­பெறும் இந்த 'கூகல் மீட்' சந்­திப்­பில் அந்த வாரத்­திற்­கான சிறப்புக் கட்­டு­ரை­கள், செய்­தி­கள் குறித்த கலந்­து­ரை­யா­டல் நடை­பெ­றும். வேலை­யில் சேர்ந்து மூன்று வாரங்­க­ளுக்கு அவர்­கள் பயன்­ப­டுத்­திய பல சொற்­றொ­ட­ரின் சுருக்­கங்­கள் எனக்­குப் புரி­ய­வில்லை. வீட்­டி­லி­ருந்தவாறே வேலை செய்ய வேண்­டிய அந்த சூழ­லும் எனக்­குக் கைகொ­டுக்கவில்லை. எங்கு தொடங்­கு­வ­தென்றே தெரி­யாது இருந்த எனக்கு ஆத­ர­வாக இருந்து வழி­காட்­டு­ தல்­கள் வழங்­கி­னர் சக

செய்­தி­யா­ளர்­களும் செய்தி ஆசி­ரி­யர்­களும்.

கிருமித்­தொற்று தொடங்­கி­ய­தி­லி­ருந்து பல மாதங்­கள் வீட்­டிலே 'நெட்­ஃபி­லிக்ஸ்' பார்த்து காலம் கழித்த எனக்கு செய்­தி­யா­ள­ரா­ன­தும் ஒவ்­வொரு முறை­யும் வீட்­டை­விட்டு வெளியே சென்று செய்­தி­களை சேக­ரிக்­கும் வாய்ப்பு கிடைத்­தது புத்­து­ணர்ச்சி அளித்­தது. வேலைக்­குச் சேர்ந்த சில மாதங்­களில் சிங்­கப்­பூர் பொது தேர்­தல் 2020 தொடங்­கி­யது. செய்­தி­யா­ளர்­க­ளுக்கு வேலை­யும் கூடி­யது. அர­சி­ய­லில் அதிக ஆர்­வமோ அறிவோ இல்­லாத எனக்கு வேட்­பா­ளர்­க­ளின் பிர­சா­ரங்­க­ளுக்­குச் செல்­வ­தும் அவர்­களை நேர்­காணல் செய்­வ­தும் புது­மை­யான அனு­ப­வ­மா­கவே இருந்­தது.

கடந்த ஏழு மாதங்­க­ளாக எனது சக செய்­தி­யா­ளர்­கள் அடிக்­கடி என்­னி­டம் கூறும் ஒன்று, "வழக்­க­மாக இது இப்­படி இருக்­காது, இவ்­வாண்டு மட்­டும் மாறு­தலாக இருக்­கிறது" என்­ப­து­தான். கிரு­மித்­தொற்­றால் சிங்­கப்­பூர் மக்­க­ளின் அன்­றாட வாழ்க்கை பல வழி­களில் மாற்­றம் கண்­டுள்ள நிலை­யில், செய்தி சேக­ரிப்பு முறை­களும் மாறி­யுள்­ளன. நான் இது­வரை­ தமிழ் முரசு அலு­வ­ல­கத்­திற்கு ஒரு முறை­தான் சென்­றி­ருக்­கி­றேன். அலு­வ­ல­கத்­திற்­குச் சென்று வேலை செய்­வது வீட்­டி­லி­ருந்து வேலை செய்­வதைக் காட்­டி­லும் வித்­தி­யா­ச­மா­னது என்று எனது சக செய்­தி­யா­ளர்­கள் கூறு­கின்­ற­னர். தமிழ் முரசு அலு­வ­ல­கத்­துக்­குச் சென்று பணி­பு­ரி­வது இவ்­வாண்டு நான் எதிர்­பார்க்­கும் முக்­கி­ய­மா­ன­வற்­றில் ஒன்­றா­கும்.

இந்நிலையில், 2020ஆம் ஆண்டைப் போல் இவ்வாண்டிலும் புதிய வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நிலையற்ற சூழலில் மீள்திறனின் முக்கியத்துவம்

எஸ்.வெங்­க­டே­‌ஷ்­வ­ரன்

கடந்த ஆண்டு ஏற்­பட்ட சோத­னை­க­ளி­லி­ருந்து புதிய ஆண்­டில் உலக மக்­கள் மீண்டு வர வேண்­டும் என்­பதே பல­ரது கனா. ஆனால் அடங்க மறுக்­கும் கொவிட்-19 கிரு­மித்­தொற்று இதற்­குச் சவா­லாக இருக்­கிறது.

கிரு­மித்­தொற்­றை முறி­ய­டித்­தா­லும் பொரு­ளி­யல் வளர்ச்சி, வேலை வாய்ப்­பு­கள், பயண வாய்ப்பு­கள் போன்­ற­வை­யெல்­லாம் உல­கிற்கு வழக்­கம்­போல திரும்ப வருமா என்­பது சந்­தே­கமே.

எனவே 2021ஆம் ஆண்டு ஓர் அமர்க்­கள ஆண்­டாக இருக்­க­வேண்­டும் என்று விரும்­பு­வ­தை­விட எத்­த­கைய சவால்­கள் ஏற்­பட்­டா­லும் அதை எதிர்­கொள்­ளும் மீள்­தி­றனை கொண்­டி­ருக்க வேண்­டும் என்று விரும்­பு­வதே சாமர்த்­தி­ய­மா­கும்.

என் தனிப்­பட்ட அனு­ப­வத்­தில், தமிழ் முரசு நாளி­தழ் இயங்­கிய விதம், மீள்­தி­ற­னி­னின் முக்­கி­யத்­து­வத்­தைப் பற்றி எனக்­குக் கற்று தந்­தது.

பல நாட்­கள் வீட்­டில் இருந்­த­படியே வேலை பார்ப்­பது பல­ருக்­கும் புதிய அனு­ப­வ­மாக அமைந்­தது.

அலு­வ­ல­கத்­தில் செய்­தி­யா­ளர்­களு­டன் உட­னுக்­கு­டன் தொடர்­பு­கொண்டு செய்­தி­களை எழு­தும் பழக்­கம் கொண்ட எங்­க­ளுக்கு அதை மின்­னஞ்­சல், தொலை­பேசி, மெய்­நி­கர் காணொளி மூலம் தொடர்­பு­கொண்டு செய்­ய­வேண்­டிய சூழ்­நிலை உரு­வா­னது.

நோய் தடுப்­புக்­கான கட்டுப்பாட்டு நட­வ­டிக்­கை­கள் நடப்­பில் இருந்த ஏப்­ரல், மே மாத காலத்­தில் பல­ரது உணர்வு­களும் தளர்ந்­து­போ­னதை எங்­களில் பலர் உணர்ந்­தோம்.

ஆனா­லும் ஒவ்­வொரு நாளும் தர­மான செய்­தி­களை வழங்­கு­வதில் முனைப்­பு­டன் இருந்­தோம். நாட்டு நடப்பு முதல், இந்­தியா, உல­கம் சார்ந்த செய்­தி­களை சிறி­த­ள­வும் தரம் குறை­யா­மல் வழங்கி வந்­தோம்.

கொவிட்-19 சூழ­லில் நமது இந்­திய சமூ­கம் எதிர்­நோக்­கிய சவால்­கள் அவற்றை முறி­ய­டிக்க அது ஆற்­றிய பங்கு ஆகி­ய­வற்றை நாங்­கள் பதிவு செய்­தோம்.

பல மாற்­றங்­க­ளுக்­கும் நிலை­யற்ற சூழ­லிற்­கும் இடையே இதைச் செய்­தோம். இதற்கு எங்­க­ளது மீள்­தி­றன் ஒரு முக்­கிய கார­ணம். ஒரு­வ­ருக்கு ஒரு­வர் உதவி செய்­வது, ஒற்­று­மை­யு­டன் செயல்­பட்­டது மற்­றொரு கார­ணம். இதற்கிடையே, புதி­தாக எது­வும் செய்ய முடி­யாத ஆண்டு என்று நினைத்­த­போது 'அகம்' மேடை­நா­டக குழு­வின் 'இஸம்ஸ்' என்ற மேடைப்­ப­டைப்பு திட்­டத்­தில் ஈடு­பட வாய்ப்பு கிடைத்­தது. என் வாழ்­வில் முதல் முறை­யாக நடித்­தேன். கடந்த ஆண்­டில் புதிய அனு­ப­வத்தை வாழ்க்கை எனக்கு தந்­துள்­ளது என்­பது வியக்­கத்­தக்­கது. நன்­றி­யுள்­ள­வ­னாக இருக்­கி­றேன். இந்த ஆண்­டில் பல சவால்­களை எதிர்­பார்க்­கி­றேன். சவால்­க­ளுக்கு இடையே என் திரு­ம­ண­மும் நிக­ழ­வுள்­ளது. மகிழ்ச்சி, சிறி­த­ளவு அச்­சம், எதை­யும் சமா­ளித்­து­விட முடி­யும் என்ற தைரி­யம் ஆகிய உணர்ச்சி­க­ளின் கல­வை­யு­டன் புதிய ஆண்டை வர­வேற்­கி­றேன். 2020ஆம் ஆண்­டில் கிடைத்த அனு­ப­வங்­களே இதற்­குக் கார­ணம்.

புது ஆண்டு என்ன சவால்­களை தந்­தா­லும் அதை உடைத்­தெ­றிந்து சாத­னை­கள் புரி­வோம், மீள்­தி­ற­னு­டன் முன்­னே­று­வோம்.

வாழ்க்கைப் பாதையை மாற்றிய கொவிட்-19

கி.ஜனார்த்­த­னன்

2019ஆம் ஆண்­டில் என் நண்­ப­ரின் திரு­ம­ணத்­திற்­காக சென்­னைக்­குச் சென்­றி­ருந்­தேன். அதன் பிறகு ஊட்­டி­யில் உல்­லா­சப் பய­ணம் மேற்­கொண்­டது இன்­னும் என் மன­தில் பசு­மை­யாக உள்­ளது. தற்­போ­தைய கிரு­மிப்­ப­ர­வல் சூழ­லி­லும் இந்த நினை­வு­கள் அவ்­வப்­போது எட்டி பார்க்­கின்றன.

இவ்­வாண்டு இந்­தி­யா­வுக்­கும் இலங்­கைக்­கும் தனி­யாக செல்ல செல்­ல­வேண்­டும் என விரும்­பு­கிறேன்.

கொவிட்-19 முதன்­மு­த­லில் தலை­தூக்­கி­ய­போது இந்­தி­யா­வில் உள்ள சிலர் சாம்­பார், ரசம் சாப்­பி­டு­வ­தால் அவர்­க­ளுக்கு இயற்­கை­யான கொரோனா தடுப்பு சக்தி உள்­ளது என்ற கூறி­யதை இப்­போது நினைத்­துப் பார்க்­கும்­போது வேடிக்­கை­யா­க­வும் வேத­னை­யா­க­வும் உள்­ளது. கிரு­மிப்­ப­ர­வ­லின் வேகத்­திற்கு எல்­லைக் கட்­டுப்­பாடு­களும் முடக்­க­நி­லை­களும் ஈடு­கொ­டுக்­க­வில்லை.

கடந்த ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் இந்­தி­யா­வுக்­குப் பய­ணம் செய்ய வேண்­டும் எனத் திட்­ட­மிட்­டி­ருந்­தேன். ஆனால் நிலைமை சீரா­கும்­வரை பொறுத்­தி­ருக்­கும்­படி எனது அன்­புக்­கு­ரி­ய­வர்­கள் அறி­வு­றுத்­தி­னர். அவர்­கள் சொற்­படி நான் நடந்­து­கொண்­ட­தால் எனக்­குத் தெரிந்த சில­ரைப்­போல விமானப் பய­ணச்­சீட்­டு­கள், விடுதி ஆகி­ய­வற்­றுக்­கான முன்­ப­தி­வு­களைச் செய்து பணத்தை இழக்­கும் நிலை ஏற்­ப­ட­வில்லை.

நாடு­க­ளின் எல்­லை­கள் மூடப்­பட்­ட­தால் பல­ரின் தனிப்­பட்ட வாழ்க்­கை­யில் மிகப் பெரிய பாதிப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன. தங்­க­ளது உற­வி­னர்­க­ளின் திரு­ம­ணங்­க­ளைக்­கூட சில­ரால் நேரில் காண இய­ல­வில்லை.

நிலைமை சரி­யா­கும் வரை திரு­ம­ணங்­களை ஒத்­தி­வைப்­பது சாத்­தி­ய­மா­கும். ஆனால் இறு­திச் சடங்­கு­கள் அப்­படி அல்ல.

கொவிட்-19 சூழ­லில் உள­வி­யல் ரீதி­யான பல்­வேறு மாற்­றங்­க­ளைப் பலர் எதிர்­நோக்கு­கின்­றன, காதல் வயப்­பட்­ட­வர்­களும் இதற்கு விதி­வி­லக்­கல்ல. இத­னால் முறிந்த உற­வு­களும் உள்­ளன. கொவிட்-19 சூழல் கார­ண­மாக சில­ரது வாழ்க்­கைப் பாதை­களும் மாறி­யுள்­ளன என்று சொன்­னால் அது மிகை­யன்று.

என்­னால் வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொள்ள முடி­யா­த­போதும் வேறு சில பய­ணங்­களை மேற்­கொண்­டேன்.

கற்­றல் பய­ணங்­கள், உற­வுப் பய­ணங்­கள் எனப் பல்­வேறு பாதை­களில் சென்­றேன். சில பய­ணங்­கள் இனி­தாக அமைந்­தன. வேறு சில பாதை­களில் சற்று கர­டு­மு­ர­டா­கவே இருந்­தன.

கொவிட்-19 கார­ண­மாக நமது வாழ்க்கை முறை பெரி­த­ள­வில் மாற்­றம் கண்­டுள்­ளது.

இந்­நி­லை­யில், 2021ஆம் ஆண்­டில் அடி­யெ­டுத்து வைத்­துள்­ளோம். உல­கத்­தைப் பற்றி மேலும் நன்கு புரிந்­து­கொண்டு இளை­யர்­க­ளான நாம் புதிய இலக்­கு­களை நோக்­கிச் செல்ல வேண்­டும்.

நம்­பிக்­கையை மூல­த­ன­மா­கப் பயன்­ப­டுத்தி பய­ணங்­க­ளைத் தொடங்­கு­வோம், தொட­ரு­வோம்.