கொவிட்-19 நோய்ப்பரவலுக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்ந்து தேவைப்படுவதாக அண்மையில் பாதிக்கப்பட்டுள்ள இரண்டு பிள்ளைகள் சரியான நேரத்தில் நினைவூட்டுவதாக கல்வியமைச்சர் லாரன்ஸ் வோங் தெரிவித்திருக்கிறார்.
இந்தச் சம்பவங்கள் பள்ளித் தவணையின்போது கண்டுபிடிக்கப்பட்டிருந்தால் கிருமித்தொற்றுக்குழுமங்கள் எளிதில் உருவாகி இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார். சிங்கப்பூரின் மூன்றாவது கட்ட தளர்வு நடவடிக்கையின்போது பாதுகாப்பு இடைவெளி தொடர்ந்து கடைபிடிக்கப்படவேண்டும் என எச்சரித்தார்.
"மூன்றாவது தளர்வு நடவடிக்கையின்போதும் நாம் பள்ளிகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பள்ளி முழுவதும் கடைப்பிடித்து வருகிறோம்," என்று திரு வோங் கூறினார்.

