கொவிட்-19 விரைவுப் பரிசோதனையின் கட்டணம் $50க்கு கீழ் குறைக்கப்பட்டது

கொவிட்-19 விரைவுப் பரிசோதனையின் கட்டணம் $50க்கு கீழ் குறைக்கப்பட்டது

2 mins read
a241604f-1149-4037-941d-845e304ee33f
-

ஒரு­வ­ருக்கு $80 ஆக இருந்த கொவிட்-19 விரை­வுப் பரி­சோ­த­னைக்­கான செலவு தற்­போது $50க்குக் கீழ் குறைக்­கப்­பட்­டுள்­ளது என்று கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் நேற்­றுத் தெரி­வித்­தார். செயல்­முறை, மனி­த­வள செல­வு­கள் உட்­பட 'ஆன்­டி­ஜென்' விரை­வுப் பரி­சோ­த­னை­யின் செல­வு­கள் மேலும் குறைய வாய்ப்­புள்­ளது என்­றார் அவர்.

"காலப்­போக்­கில், மலி­வான, விரை­வான, நிர்­வ­கிக்க மிக­வும் வச­தி­யான மேலும் புத்­தாக்­க­மிக்க விரைவு பரி­சோ­த­னைக் கரு­வி­களை எதிர்­பார்க்­க­லாம். இவை விரி­வா­க­வும், எளி­தா­க­வும் சோதிக்க உத­வு­வ­து­டன் தொற்­று­க­ளைக் கண்­ட­றிந்து, மக்­களை இன்­னும் முழு­மை­யா­கப் பாது­காக்க உத­வும்," என்று திரு வோங் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

'ஆன்­டி­ஜென்' விரை­வுப் பரி­சோ­தனை மிக­வும் உணர்­தி­றன் வாய்ந்­தது. ஆனால் பல்­ப­டிய தொடர்­வினை சோதனை (பிசி­ஆர்) சற்று தாம­த­மா­கும்.

சிங்­கப்­பூர் முதன்­மு­த­லில் சோத­னையை மேற்­கொண்­ட­போது பல்­வேறு குழுக்­க­ளி­டையே கவ­லை­கள் வெளிப்­பட்­டன என்று திரு வோங் குறிப்­பிட்­டார். சிலர் இது ஒரு தொந்­த­ர­வாக இருக்­கும் என்று நினைத்­த­னர், மற்­ற­வர்­கள் சோத­னைக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வது களங்­க­மா­கப் படி­யும் என நினைத்­த­னர். ஆனால் தற்­போது அனை­வ­ருமே கிருமி பரி­சோ­த­னை­யின் முக்­கி­யத்­தை­யும் அவ­சி­யத்­தை­யும் புரிந்­து­கொண்டு, வர­வேற்க முடி­கிறது என தாம் நம்­பு­வ­தாக அமைச்சர் கூறினார். அடிக்­கடி, பர­வ­லான சோத­னை­கள் சிங்­கப்­பூ­ருக்கு முக்­கிய உத­வி­யாக இருப்­ப­தா­க­வும், வரும் மாதங்­களில் இது அதி­க­ரிக்­கப்­படும் என்­றும் அவர் வலி­யு­றுத்­தி­னார்.தொற்­று­நோய்­க­ளின்­போது தொடர்ச்­சி­யான சோதனை வாழ்­வின் ஒரு பகு­தி­யாக இருக்கும் என்ற மனப்­போக்­கிற்கு சிங்­கப்­பூ­ரர்­கள் பழ­கிக்கொள்ள வேண்­டும் என்­றார் திரு வோங.

தற்­போது, ​​கடு­மை­யான சுவா­சத் தொற்று அல்­லது காய்ச்­சல் போன்ற அறி­கு­றி­க­ளுக்­காக மருத்­து­வ­ரைப் பார்க்­கும் எவ­ரும் பிசி­ஆர் பரி­சோ­தனை செய்ய அறி­வு­றுத்­தப்­ப­டு­வார்­கள் என்று திரு வோங் கூறி­னார். டிசம்­ப­ரில் ஒவ்­வொரு வார­மும் சரா­ச­ரி­யாக 14,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் பரி­சோ­திக்­கப்­பட்­ட­னர். அண்­மைய தொற்­று­கள் இவ்­வா­று­தான் கண்­ட­றி­யப்­பட்­டன என்று அவர் மேலும் கூறி­னார்.

"உடல்­நிலை சரி­யில்­லாத எவ­ரும் உட­ன­டி­யாக மருத்­து­வ­ரைச் சென்று காண்­பது மிக­வும் முக்­கி­யம்," என்ற அமைச்­சர், மருத்­து­வர் கொரோனா பரி­சோ­த­னையை அறி­வு­றுத்­தி­னால் அதற்கு இணங்­கு­மாறு மக்­க­ளைக் கேட்டுக்கொண்­டார். கொவிட்-19 தொற்றை எதிர்­கொள்ள அமைக்­கப்­பட்ட அமைச்சு­கள்நிலைப் பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு வோங், சிங்­கப்­பூர் மூன்­றாம் கட்ட தளர்­வு­க­ளைச் செயல்­ப­டுத்­தும்­போது, பாது­காப்பு நிர்­வாக நட­வடிக்­கை­க­ளைக் கடைப்­பி­டிப்­ப­தன் முக்­கி­யத்­து­வத்தை அடிக்­கோ­டிட்­டுக் காட்­டி­னார்.