'கேடிவி' என்னும் பாட்டுப் பாடி மகிழும் கேளிக்கைக் கூடங்கள் சிலவற்றுக்கு, தங்கள் வாடிக்கையாளர்கள் கொவிட்-19 சோதனை செய்துகொள்வதில் இருந்து விலக்கு அளித்து திறப்பதற்கு முன்னோடித் திட்டமாக அனுமதி அளிக்கப்படலாம் என்று உள்துறை அமைச்சு தெரிவித்தது.
ஆனால், இவ்வாறு அனுமதிக்கப்படும் கேளிக்கைக்கூடங்கள் சற்று மாறுபட்ட விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது, அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே ஒரு குழுவில் இருக்க வேண்டும். அத்துடன் மது அருந்தத் தடை விதிக்கப்படும் என்றும் உள்துறை அமைச்சின் பேச்சாளர் ஒருவர் நேற்று தெரிவித்தார். கேடிவி கேளிக்கைக் கூடங்கள் கடந்த நவம்பர் 6ஆம் தேதி மூடப்பட்டு, பின்னர் மார்ச் 26ஆம் தேதி, சில கேளிக்கைக் கூடங்கள் மூன்று மாத முன்னோடித் திட்டத்தின் கீழ் திறக்க அனுமதிக்கப்பட்டன.
அப்போது வாடிக்கையாளர்கள், கொவிட்-19 சோதனை செய்துகொண்டிருக்க வேண்டும் என்ற விதிமுறை அறிவிக்கப்பட்டது.

