அதிகம் பேர் பயன்படுத்தி வரும் ரீடிஸ்கவர்ஸ் பற்றுச்சீட்டுகள்

அதிகம் பேர் பயன்படுத்தி வரும் ரீடிஸ்கவர்ஸ் பற்றுச்சீட்டுகள்

1 mins read
cdac1bf7-a86c-4f78-858d-33fddee217c8
-

300,000க்கு அதிகமான சிங்கப்பூரர்கள் தங்களது சிங்கப்போ-ரீடிஸ்கவர்ஸ் பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி ஹோட்டல்கள், கவர்ச்சிகள் மற்றும் சுற்றுலாக்களுக்காகப் பயன்படுத்தியுள்ளனர். டிசம்பர் 1ஆம் தேதி முதல் இந்தப் பற்றுச்சீட்டுகள் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஜனவரி 1ஆம் தேதியன்று, ஹோட்டல் முன்பதிவுகளின் மதிப்பு 35.9 மில்லியன் வெள்ளியாக இருந்ததாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

சாங்கி ரெக்கமென்ஸ், குளோபல்டிக்ஸ், டிரெவலோக்கா, டிரிப்.காம், க்லுக் ஆகிய முன்பதிவுத் தளங்களில் இந்தப் பற்றுச்சீட்டுகளை பயன்படுத்தப்படலாம்.இந்தப் பற்றுச்சீட்டு குறித்து சிங்கப்பூரர்கள் கொண்டிருந்த ஆர்வத்தைக் கண்டு தாம் மனநிறைவுடன் இருப்பதாக சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் தெரிவித்தது.