சண்முகம்: 'டிரேஸ்டுகெதர்' மிகக் கடுமையான குற்றங்களுக்கே பயன்படுத்தப்படும்

சண்முகம்: 'டிரேஸ்டுகெதர்' மிகக் கடுமையான குற்றங்களுக்கே பயன்படுத்தப்படும்

1 mins read
6f974771-1ef2-429a-aebb-0b173eeb125a
-

சிங்கப்பூரின் தேசிய அளவிலான தொடர்புகளின் தடமறியும் திட்டமான 'டிரேஸ்டுகெதர்' மூலம் சேகரிக்கப்படும் தரவுகளை மிகக் கடுமையான குற்றங்களுக்கே போலிஸ் பயன்படுத்தும் என சட்ட, உள்துறை அமைச்சர் கா.சண்முகம் தெரிவித்து இருக்கிறார்.அத்தகைய தரவுகள் ஒரு கொலை விசாரணைக்காகப் பயன்படுத்தப்பட்டதை அமைச்சர் விவியன் நாடாளுமன்றத்தில் இன்று வெளிப்படுத்தினார்.

எத்தகைய சூழ்நிலைகளில் போலிஸ் டிரேஸ்டுகெதர் தரவுகளைப் பயன்படுத்தக்கூடும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பிரித்தம் சிங் கேட்டார்.

அதற்கு, மிகக் கடுமையான குற்றங்களுக்கே அத்தகைய தரவுகளைப் பயன்படுத்த வேண்டும் என்பதே போலிசின் அணுகுமுறை என அமைச்சர் சண்முகம் பதில் அளித்தார். "சட்டப்படி தேவையில்லை என்ற போதும், போலிஸ் அதைக் கவனமாகப் பரிசீலித்து, தகவலைப் பெறுவதில் விவேகத்துடன் நடந்துகொள்ளும்," என்றார் அவர்.

குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்கீழ் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்த வேண்டிய கடமையும் போலிசுக்கு இருக்கிறது என்றும் அவர் கூறினார். "ஒரு கொலை நிகழ்ந்துவிட்டால், பாதிக்கப்பட்டவர், அவரின் குடும்பத்தினர் போன்ற தகவல்களை டிரேஸ்டுகெதர் கருவியின் மூலம் பெறலாம்," என்று அவர் குறிப்பிட்டார்.