நோய்முறியடிப்பு காலத்தில் உணவுக் கடை சோதனைகள் குறைவாக இடம்பெற்றன

நோய்முறியடிப்பு காலத்தில் உணவுக் கடை சோதனைகள் குறைவாக இடம்பெற்றன

1 mins read
eaa95b50-48e4-44df-a4c5-1e339017a5c2
(படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்) -

நோய் முறியடிப்பு காலம் கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் வரை இரண்டு மாதம் நடப்பில் இருந்தபோது உணவுக் கடைகள், உணவு தயாரிப்பு நிறுவனங்கள் தொடர்பான சோதனைகள் குறைவாகவே மேற்கொள்ளப் பட்டன என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ இன்று தெரிவித்தார். இருப்பினும், கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் சிங்கப்பூர் உணவு அமைப்பு தனது சோதனை நடவடிக்கை களை முடுக்கி விட்டது என்றும் நோய் முறியடிப்பு காலத்தில் உணவு தொடர்பான ஆரோக்கிய நடவடிக்கைகள் பற்றி உணவுக் கடைகளுக்கும் உணவு தயாரிப்பு நிறுவனங் களுக்கும் நினைவூட்டல் அறிக்கைகளை வழங்கிக் கொண்டிருந்தது என்றும் கூறினார்.

"உணவுக் கடைக்காரர்கள் தங்கள் கடைகளை அடிக்கடி சுத்தம் செய்து தூய்மையாக வைத்திருக்குமாறும் அவற்றின் ஊழியர்களும் தூய்மை நடவடிக்கைகளைக் கடைப்பிடிப்பதை உறுதி செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர். நோய் முறியடிப்பு காலத்திற்கு முன்பு, அதாவது 2019 ஏப்ரல் முதல் 2020 மார்ச் வரை சிங்கப்பூர் உணவு அமைப்பு 47,000க்கு மேற்பட்ட சோதனைகளை மேற்கொண்டது," என்றும் திருவாட்டி ஃபூ தெரிவித்தார்.