ஒன் ராபிள்ஸ் பிளேஸ் கடைத்தொகுதிக்கு அருகே 18 வயது இளையர் நேற்று மாண்டு கிடக்கக் காணப்பட்டார். சம்பவம் குறித்த தகவல் 9.28 மணிக்குக் கிடைத்தாகத் தெரிவித்த போலிசார், அந்த இடத்தில் அவர் அசைவின்றிக் கிடந்திருந்ததாகக் கூறினார். அந்த இளையர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை தொடர்கிறது. இந்தச் சம்பவம் இயற்கைக்கு மாறான மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளது.