சிராங்கூன் ரோடு மருத்துவமனையில் தீ

சிராங்கூன் ரோடு மருத்துவமனையில் தீ

1 mins read
01dc132c-b458-4348-b8dd-f5adf560e85c
-

சிராங்கூன் ரோட்டிலுள்ள குவோங் வாய் ஷியூ மருத்துவமனையின் மூன்றாவது மாடியில் தீ விபத்து மூண்டது.

சம்பவம் பற்றிய தகவல் நேற்றிரவு 8.25 மணிக்குப் பெற்றதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினருக்குக் கிடைத்ததாக அவர்கள் தெரிவித்தனர். நீரைப் பீய்ச்சியடிக்கும் குழாயால் அந்தத் தீ இறுதியில் அணைக்கப்பட்டது.

பிறருக்குக் காயம் ஏற்பட்டிருப்பதாகவோ வெளியேற்ற நடவடிக்கைகள் நடந்திருப்பதாகவோ தகவல் வெளிவரவில்லை.

விபத்திற்கான காரணத்தைக் குடிமைத் தற்காப்புப் படையினர் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். மருத்துவமனையின் தாதிமை இல்லவாசிகள் மற்றொரு புளோக்கில் தங்கியிருப்பதாகவும் இந்தச் சம்பவத்தால் அவர்கள் பாதிக்கப்படவில்லை என்றும் தகவல் வெளிவந்துள்ளது.