ஏற்ற, இறக்கத்தில் சிஓஇ கட்டணம்

ஏற்ற, இறக்கத்தில் சிஓஇ கட்டணம்

1 mins read
3179af51-37b2-4fb3-817a-7928790323bc
-

சிஓஇ எனப்­படும் வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணத்தை நிர்­ண­யிப்­ப­தற்­கான இவ்­வாண்­டின் முதல் ஏலம் ஏற்ற இறக்­க­மாக முடிந்­தது. இரு வாரங்­க­ளுக்கு முன்­னர் நடை­பெற்ற ஏலத்­தைக் காட்­டி­லும் நேற்­றைய ஏலத்­தில் பெரிய அள­வி­லான மாற்­றம் இல்லை.

1,600 சிசி வரை­யி­லான சிறிய வகை கார்­க­ளுக்­கான கட்­ட­ணம் $40,556லிருந்து சற்று உயர்ந்து $40,609 ஆனது. அதே­நே­ரம், 1,600 சிசிக்கு மேற்­பட்ட கார்­க­ளுக்­கான கட்­ட­ணம் $49,300லி ருந்து $49,001க்குக் குறைந்­தது. மோட்­டார் சைக்­கிள் தவிர்த்து இதர வாக­னப் பிரி­வுக்கு ஒதுக்­கப்­பட்ட, பெரும்­பா­லும் பெரிய கார்­கள் தொடர்­பி­லான ஏலம் $49,500லிருந்து இறங்கி $49,489 ஆனது.

சரக்கு வாக­னங்­க­ளுக்­கான கட்­ட­ணத்­தில் மட்­டும் ஏற்­றம் காணப்­பட்­டது. முந்­தைய ஏலத்­தில் நிர்­ண­யிக்­கப்­பட்ட $35,201 அதி­க­ரித்து $35,900 ஆனது.

மோட்­டார் சைக்­கிள்­க­ளுக்­கான கட்­ட­ணம் $7,689லிருந்து $7,501க்கு இறங்­கி­யது. இந்த ஏலத்­திற்­காக 3,354 வாகன உரி­மைச் சான்­றி­தழ் கட்­ட­ணங்­க­ளுக்­காக 4,805 ஏலக்­கோரிக்கைகள் வந்­தி­ருந்­தன. மேலும் இவ்­வாண்டுக்கான சிஓ­இக்­க­ளின் விநி­யோ­கம் கடந்தாண்டு போலவே இருக்கும் என கூறப்­ப­டு­கிறது.