மனைவி, மாமியார், மூன்று மைத்துனிகள் ஆகியோர் குளிப்பதை திருட்டுத்தனமாகப் படமெடுத்த 32 வயது ஆடவருக்கு நேற்று ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. பெண்களின் அடையாளத்தைக் காக்கும் பொருட்டு குற்றவாளியின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
2015ஆம் ஆண்டு சமையலறைக் கடிகாரத்திற்குள் கேமராவை ஒளித்து வைத்துப் படமெடுத்தபோது அதனை அவரது மனைவி கண்டுபிடித்து சண்டை போட்டார்.
பின்னர் 2017ஆம் ஆண்டும் அதே குற்றத்தைச் செய்தார். விவாகரத்து பெற்றுள்ள ஆடவர், அந்த ஐந்து பெண்களுடன் ஒரே வீட்டில் வசித்தபோது குற்றங்களைச் செய்ததாகக் கூறப்பட்டது.

