சிங்கப்பூரில் நடைபெறும் உலக பொருளியல் கருத்தரங்கு தேதிகளில் மாற்றம்

சிங்கப்பூரில் நடைபெறும் உலக பொருளியல் கருத்தரங்கு தேதிகளில் மாற்றம்

1 mins read

இவ்­வாண்டு சிங்­கப்­பூ­ரில் உலகப் பொரு­ளி­யல் கருத்­த­ரங்கு நடை­பெ­றும் தேதி­களில் மாற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

முன்­னணி அர­சி­யல் தலை­வர்­கள், வர்த்­த­கத் தலை­வர்­கள், கல்­வி­யா­ளர்­கள் ஆகி­யோர் பங்­கேற்­கும் இந்­தக் கருத்­த­ரங்கு மே மாதம் 13ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை நடை­பெ­றும் என்று முன்­ன­தாக அறி­விக்­கப்­பட்­டது.

ஆனால், இப்­போது அந்­தக் கருத்­த­ரங்கு இரண்டு வாரங்­கள் கழித்து மே மாதம் 25ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடை­பெ­றும் என்று உலகப் பொரு­ளி­யல் கருத்­த­ரங்கு அமைப்­பின் இணை­யப் பக்­கத்­தில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கருத்­த­ரங்­கின் தேதி­கள் மாற்­றப்­பட்­டி­ருப்­ப­தற்­கான கார­ணங்­கள் பற்றி அந்த இணை­யத் தளத்­தில் குறிப்­பி­ட­வில்லை.