அகற்றப்பட்ட பிரபலமான 'துவாஸ் விளக்குக் கம்பம்' மீண்டும் வைக்கப்பட்டது

சிங்­கப்­பூ­ரின் மேற்கு முனை­யில், துவாஸ் பகு­தி­யில் உள்ள ‘Tuas Lamp Post 1’ எனும் விளக்­குக் கம்­பம், கூகல் வரை­ப­டத்­தி­லும் இடம்­பெற்­றுள்­ளது என்­பது பல­ருக்­கும் தெரி­யாத ஒரு தக­வல்.

சைக்­கி­ளி­ல் தீவைச் சுற்றி வரும் சைக்­கி­ளோட்ட ஆர்­வ­லர்­கள், அந்த விளக்­குக் கம்­பத்தை ஒரு முக்­கிய அடை­யா­ள­மா­கக் கருதி அங்கு நிறுத்­து­வார்­கள்.

மேலும் அந்த விளக்­குக் கம்­பத்­துக்­குப் பக்­கத்­தில் நின்று புகைப்­ப­டம் எடுத்­துக்­கொள்­வார்­கள். பின்­னர் தங்­க­ளுக்கு விருப்­ப­மான ஒட்­டு­வில்­லை­களை அந்த விளக்­குக் கம்­பத்­தில் ஒட்­டி­வைத்து விட்டு செல்­வார்­கள் என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங் தமது ஃபேஸ்புக் பக்­கத்­தில் நேற்று பதி­விட்­டி­ருந்­தார்.

“அந்­தப் பகு­தி­யில் விளக்கு வெளிச்­சம் பரா­ம­ரிப்­புப் பணி­களை மேற்­கொள்­ளும் குத்­தகை நிறு­வ­னம், தனது வழக்­க­மான சோத­னை­யின்­போது அந்­தப் பகு­தி­யில் உள்ள இந்­தக் குறிப்­பிட்ட விளக்­குக் கம்­பம் உட்­பட பல விளக்­குக் கம்­பங்­களை அப்­பு­றப்­ப­டுத்­தி­யது.

அங்கு தங்­க­ளுக்கு விருப்­ப­மான ஒட்­டு­வில்­லை­கள் ஒட்­டப்­பட்ட விளக்­குக் கம்­பம் அகற்­றப்­பட்ட செய்­தி­ய­றிந்த சைக்­கி­ளோட்ட ஆர்­வ­லர்­கள் கவ­லை­ய­டைந்­த­னர்.

இதை அறிந்த அமைச்­சர் ஓங், இது தொடர்­பாக நிலப் போக்­கு­வ­ரத்து ஆணை­யத்­து­டன் பேசி­னார். ஆணை­யம் ஜேடிசி கழ­கத்­து­டன் பேசி­யது.

“தீவின் வெகு தொலை­வில் இருக்­கும் ஒரு விளக்­குக் கம்­பம் என்­ப­தா­லும் சைக்­கி­ளோட்­டி­க­ளுக்கு முக்­கிய அடை­யா­ளச் சின்­ன­மாக விளங்­கு­வ­தா­லும் அந்­தப் பிர­ப­ல­மான விளக்­குக் கம்­பத்தை முன்­பி­ருந்த இடத்­திலேயே மீண்­டும் வைக்க நாங்­கள் முடிவு செய்­தோம்.

“விதி­மு­றை­களில் செய்­யப்­பட்டு உள்ள இந்­தச் சிறிய மாற்­றம் வச­திக் குறைவை ஏற்­ப­டுத்­தாது அல்­லது பொது­மக்­க­ளுக்கு ஆபத்தையும் விளை­விக்­காது.

“அதற்கு மேலாக சிங்­கப்­பூ­ரில் சைக்­கி­ளோட்ட ஆர்­வ­லர்­க­ளுக்கு மேலும் உற்­சா­கம் அளிக்­கும். இந்­தக் கார­ணங்­க­ளால் இந்த மாற்­றம் செய்­யப்­பட்­டது. நானும் இந்­தப் பிர­ப­ல­மான விளக்­குக் கம்­பத்தை அரு­கில் சென்று பார்க்க ஆவ­லாக உள்­ளேன்,” என்று போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் கருத்­து­ரைத்­தி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!