தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

$400,000 ஏமாற்றிய முன்னாள் வங்கி ஊழியருக்குச் சிறை

1 mins read
28a342dd-1dfa-46fa-b7d9-4889f61b679a
மார்கஸ் லோ திம் முன், வாடிக்கையாளர்களை ஏமாற்றி கிடைத்த பணத்தைத் தனது சூதாட்டக் கடன்களை அடைக்க பயன்படுத்தினார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

டிபி­எஸ் வங்­கி­யின் முன்­னாள் ஊழி­யர் ஒரு­வர் நான்கு பேரை ஏமாற்றி $400,000 பணத்­தைச் சுருட்­டி­னார்.

அந்­தப் பணத்தைத் தனது சூதாட்­டக் கடனை அடைக்க அவர் பயன்­ப­டுத்­தி­னார்.

மார்­கஸ் லோ திம் முன், 31, என்ற இந்த ஆட­வ­ருக்கு புதன்­கி­ழமை 33 மாதம் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

ஏமாற்­றி­யது தொடர்­பான மூன்று குற்­றச்­சாட்டுகள், பொய்க் கையெழுத்து போட்டதாகக் கூறும் ஒரு குற்­றச்­சாட்டு, குற்­றச்செயல் மூலம் கிடைத்த பலன்­களை அனு­ப­வித்­த­தா­கக் கூறும் ஒரு குற்­றச்­சாட்டு ஆகி­ய­வற்­றின் பேரில் லோ முன்­ன­தாக குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

தண்­டனை விதிக்­கப்­பட்­ட­போது இதர ஏழு குற்­றச்­சாட்டுகள் கவ­னத்­தில் எடுத்­துக் கொள்­ளப்­பட்­டன.

லோ, 2017 செப்­டம்­பர் மாதத்­திற்­கும் 2018 நவம்­பர் மாதத்­திற்­கும் இடை­யில் டிபிஸ் வங்கி­யில் வேலை பார்த்­தார். அப்­போது அவர் செய்த குற்­றச்­செயல்­கள் அம்­ப­ல­மா­யின.

வாடிக்­கை­யா­ளர்­க­ளின் பணத்தை எடுத்து தனது சூதாட்டக் கடன்­களை அடைக்­க­லாம் என்று லோ அநே­க­மாக 2018 அக்­டோ­ப­ரில் முடிவு செய்­தி­ருக்­கக்கூடும் ­என்­றும் பிறகு அவர் வாடிக்­கை­யா­ளர்­கள் நால்­வ­ரை­யும் ஏமாற்­றி­ய­தாகவும் விசா­ர­ணை­யில் தெரி­விக்­கப்­பட்­டது.

லோ, ஏமாற்­றிய பணத்தை முழு­மை­யாக டிபி­எஸ் வங்­கி­யி­டம் திருப்பிக் கொடுத்­து­விட்­டார்.

சொந்த பிரச்­சி­னை­கள் இருப்­ப­தா­க­வும் ஆகை­யால் ஜன­வரி 18 வரை தண்­ட­னையை ஒத்­தி­வைக்­கும்­ப­டி­யும் லோ நீதி­மன்­றத்­தைக் கேட்­டுக்­கொண்­டார்.