தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இளம்பெண்ணைக் கொன்றதாக குற்றம் சுமத்தப்பட்ட ஆடவரின் மனநிலையை மதிப்பிட 3 வார விசாரணைக் காவல்

2 mins read
e76e4ad1-c67e-43b0-bd20-6fbf765e69ae
குமாரி டியோ, 19, என்ற பெண்ணை 2007 ஜூன் 30ஆம் தேதி மரினா டெரசில் உள்ள அடுக்குமாடி வீடு ஒன்றில் கொலை செய்ததாக அகம்மது மீது குற்றம் சுமத்தப்பட்டு இருக்கிறது. ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் கோப்புப்படம்/ஃபேஸ்புக் -

குமாரி ஃபெலிசியா டியோ வெய் லிங் என்ற பெண்ணை 2007ல் கொலை செய்­த­தாக குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்ள ஆட­வர் மன­நிலையை மதிப்­பிடுவதற்­காக மூன்று வார விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்­டார்.

அகம்­மது டேனி­யல் முகம்­மது ரஃபாயி, 35, என்ற அந்த ஆட­வர், சாங்கி சிறைச்­சாலை வளா­கத்­தில் இருக்­கும் மருத்­துவ நிலை­யத்­தில் விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்டு மன­நிலை மதிப்­பிடப்­படும். அது முடிந்­த­தும் இந்த வழக்கு ஜனவரி 28ல் மீண்­டும் நீதி­மன்­றத்­துக்கு வரும்.

இந்த வழக்­கில் 'விதர்ஸ் கத்­தார் வோங்' என்ற சட்ட நிறு­வனத்­தைச் சேர்ந்த மூன்று வழக்­கறி­ஞர்­கள் அவ­ரைத் தற்­காத்து வாதா­டு­கி­றார்­கள்.

மரின் டெரஸ் அடுக்கு மாடி வீடு ஒன்­றில் 2007 ஜூன் 30ஆம் தேதி குமாரி டியோவை அகம்­மது கொலை செய்து இருக்­கி­றார் என்று குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அந்­த சிங்­கப்­பூ­ரர், ராகில் புத்ரா சித்யா சுக்­ம­ரா­ஜனா, 32, என்­ப­வ­ரு­டன் சேர்ந்து இந்­தக் காரி­யத்­தைச் செய்து இருக்­கி­றார் என்று கூறப்­ப­டு­கிறது. இந்த இரு­வ­ரும் குமாரி டியோ­வுக்கு நண்­பர்­கள். ராகில் இப்­போது வெளி­நாட்­டில் இருப்­ப­தா­கத் தெரி­கிறது. இவர் தொடர்­பான புலன்­வி­சா­ர­ணை­யின் மேல் விவ­ரங்­கள் தெரி­விக்­கப்­ப­ட­வில்லை.

குமாரி டியோ, காணா­மல் போன­போது அந்­தச் செய்தி பெரும் பர­ப­ரப்­பைக் கிளப்­பி­யது.

அந்­தப் பெண் மரின் டெர­சில் இருக்­கும் ஒரு புளோக்­கின் மின்­தூக்­கிக்­குள் இரண்டு பேரு­டன் சென்­ற­தை உள்கட்டமைப்பு கேமராக்கள் காட்­டின.

அதற்­குப் பிறகு அந்­தப் பெண் காணப்­ப­டவே இல்லை. அவ­ரைப் பற்­றிய எந்த விவ­ர­மும் தெரி­ய­வில்லை. மக­ளைக் காண­வில்லை என்று 2007 ஜூலை 3ஆம் தேதி அந்­தப் பெண்­ணின் தாயார் புகார் கொடுத்­தார்.

பிறகு இந்த விவ­கா­ரம் உள­வுத்­து­றை­யி­டம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டது. அதை­ய­டுத்து அகம்­மது கைதா­னார்.