கணவரை இழந்த, பணக்கார, முதிய சிங்கப்பூரரான திருவாட்டி சுங் கின் சுன், 94, என்பவருக்குச் சொந்தமான பங்களா இப்போது மீண்டும் விற்பனைக்கு வருகிறது.
ஜெரால்டு கிரசெண்ட்டில் 31,882 சதுர அடி பரப்புள்ள நிலத்தில் அமைந்துள்ள, 1879 முதல் 999 ஆண்டுகள் குத்தகைக் காலத்துடன்கூடிய அந்த பங்களா, இரண்டு ஆண்டுகளுக்கு முன் 2018ல் $35 மில்லியனுக்கு விற்பனைக்கு வந்தது.
ஆனால் யாரும் அதை வாங்கவில்லை. இப்போது $25 மில்லியன் இருந்தால் அதை வாங்கலாம். திருவாட்டி சுங் 2008ல் சீனாவுக்குச் சென்றிருந்தார். அங்கு யாங் யின் என்ற சுற்றுலா வழிகாட்டி அந்த மாதுக்குப் பழக்கமானார்.
தொடர்ந்து சிங்கப்பூருக்கு வந்த யாங் யின், அந்த பங்களாவில் குடியேறி தன் குடும்பத்தை இங்கு கொண்டு வந்தார். கடைசியில் திருவாட்டி சுங்கின் சொத்து எல்லாம் தன் குடும்பத்துக்குச் சேரும்படி அந்த மாதை உயில் எழுதி வைக்கும்படி செய்துவிட்டார். அந்த முதிய மாதுக்கும் யாங் யின்னின் மனைவிக்கும் பிரச்சினை ஏற்பட்டதை அடுத்த இந்த விவகாரம் நீதிமன்றம் சென்றது.
சொத்து எல்லாம் முதிய மாதுக்குத் திரும்பியது. யாங் யின் பல குற்றச்செயல்களில் ஈடுபட்டது அம்பலமாகியது.
அவருக்கு 2016ஆம் ஆண்டில் 11 ஆண்டுகள் மற்றும் இரண்டு மாதம் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

