முகக்கவச குப்பை அதிகரிப்பு; நிபுணர்கள் கவலை

முகக்கவச குப்பை அதிகரிப்பு; நிபுணர்கள் கவலை

1 mins read
8e44f14a-1cbd-4068-97e1-b4f8f84895ff
படம்: WATERWAY WATCH SOCIETY -

மருத்துவக் கழிவுகளை கொள்ளைநோய் அதிகப்படுத்தி உள்ளது.

குறிப்பாக, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய அறுவை சிகிச்சை முகக்கவசங்கள் தீவெங்கும் வீசப்படுவது அதிகரித்திருப்பதாக பாதுகாப்பு நிபுணர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

பூங்காக்கள், கடற் கரைகள், அக்கம்பக்க பகுதிகள் ேபான்றவற்றில் நாள் ஒன்றுக்கு சராசரியாக நான்கு முதல் ஐந்து வரையிலான அறுவை சிகிச்சை முகக்கவசங்களை துப்புரவாளர்கள் அப்புறப்படுத்துகின்றனர்.

முகக்கவச குப்பை அண்மை வாரங்களாக மும்முடங்கு அதிகரித்திருப்பதாக நீர்வழிகள் கண்காணிப்புச் சங்கத்தின் நிறுவனரும் தலைமை நிர்வாகியுமான யூஜின் ஹெங் கூறினார்.

சிங்கப்பூரில் மட்டுமல்லாது உலக அளவில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுப்பதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, மக்கள்தொகை அதிகமுள்ள ஆசிய நாடுகளில் இந்தப் பிரச்சினை மோசமாக உள்ளது. சிலர் முகக்கவசங்களை நீர்நிலைகளில் வீசிச் செல்லும் அவலம் உள்ளது.

குறிப்புச் சொற்கள்