சாங்கி விமான நிலையத்திலுள்ள கிரௌன் பிளாஸா விடுதியில் பணிபுரியும் மொத்தம் 234 ஊழியர்களுக்கு கொவிட்-19 இல்லை என உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
தொடர்பற்ற கிருமித்தொற்றுச் சம்பவங்கள் ஊழியர்களிடையே கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அனைவருக்குமான சோதனை நடவடிக்கையை அமைச்சு வியாழக்கிழமை அறிவித்தது. வெள்ளிக்கிழமை அன்று மூன்றாவது சம்பவம் ஒன்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை முதல் ஜனவரி 21ஆம் தேதிவரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஹோட்டல் மூடப்பட்டது.
20 வயது சிங்கப்பூர் ஆடவர், 24 வயது கொரிய நாட்டவர், 43 வயது மலேசியப் பெண் ஆகியோர் பாதிக்கப்பட்ட மூன்று பேர்.கொவிட்-19 கிருமியிலேயே இன்னும் எளிதாகத் தொற்றக்கூடிய பிரிட்டிஷ் வகை கிருமியால் அந்த சிங்கப்பூரர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளிவந்ததுள்ளது.

