சுடச் சுடச் செய்திகள்

தொழிற்கல்வி வழி உயர்படிப்பு: பலதுறைத் தொழிற்கல்லூரிகளில் சேர ‘ஓ’ நிலை மாணவர்களிடையே நாட்டம் அதிகரிப்பு

பல­துறைத் தொழிற்­கல்­லூரி பட்­ட­தாரி­கள் பல­ரும் பல்­க­லைக்­க­ழ­கப் படிப்­பிற்­குச் செல்­லும் போக்கு அதி­க­ரிக்­கிறது.

மாண­வர்­கள் தங்­கள் படிப்பு பற்­றி­யும் வாழ்க்­கைத்தொழில் விருப்­பம் பற்­றி­யும் சிறந்த முறை­யில் தெரிந்­து­கொண்டு இருக்­கி­றார்­கள்.

இவற்­றின் விளை­வாக பல­துறைத் தொழிற்படிப்பு மூலம் பல்­கலைக்­க­ழ­கக் கல்விக்குச் செல்­லும் ‘ஓ’ நிலை மாண­வர்­க­ளின் எண்­ணிக்கை அதி­க­ரிக்­கிறது.

கூட்டு மாண­வர் சேர்ப்பு நடை­முறை வழி­யாக சென்ற ஆண்டு உயர்­நிலைப்பள்­ளிக்­குப் பிந்­தைய கல்வி நிலை­யங்­களில் இடமளிக்கப்­பட்ட 20,300 பேரில் சாதனை அளவாக 52 விழுக்­காட்­டி­னர் இங்­குள்ள ஐந்து பலதுறைத் தொழிற்­ கல்­லூ­ரி­களில் இடம்­பெற்­ற­னர்.

இதர 38 விழுக்­காட்­டி­ன­ருக்கு தொடக்­கக் கல்­லூ­ரி­க­ளி­லும் மில்­லேனியா கல்வி நிலையத்திலும் இடம் அளிக்­கப்­பட்­டது. 10 விழுக்­காட்­டி­ன­ருக்கு தொழில்நுட்பக்­ கல்­விக் கழ­கத்­தில் இடம் கிடைத்தது.

பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­களில் சென்ற ஆண்டு சேர்த்­துக்­கொள்­ளப்­பட்ட மாண­வர்­களில் ஏறக்­குறைய 45 விழுக்­காட்­டி­னர் தொடக்­கக் கல்­லூ­ரிக்­கான தகு­தி­யைப் பெற்­றி­ருந்­த­னர் என்று கல்வி அமைச்சு தெரி­வித்­துள்­ளது.

இந்த அளவு 2014ல் 40 விழுக்­கா­டாக இருந்­தது.

தொடக்­கக் கல்­லூ­ரி­யில் சேர வேண்­டு­மா­னால் ஒரு மாண­வர், ஆங்­கி­லம் மற்­றும் ஐந்து ஏற்­பு­டைய பாடங்­க­ளின் அடிப்படையில் பெறு­கின்ற L1R5 மதிப்­பெண் 20 புள்ளி­களைத் தாண்­டக்­கூ­டாது.

பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­களைப் பொறுத்தவரை, ஆங்­கி­லம் மற்­றும் இதர நான்கு பாடங்­க­ளுக்­கான தேர்ச்சித் தகுதி 26 புள்­ளி­களை­விட அதி­க­மாகக்கூ­டாது.

இத­னி­டையே, பட்­ட­யப் படிப்­பிலிருந்து பட்­டப் படிப்­புக்கு மேம்­பட விரும்­பும் மாண­வர்­க­ளுக்கு அதிக மான வாய்ப்­பு­களை அர­சாங்­கம் அளிக்கிறது.

இதன் கார­ண­மாக பல­துறைத் தொழிற்­கல்­லூரி வழி­யாக பட்­டப் படிப்­புக்­குச் செல்­லும் வழி, மாண­வர்­களை அதிகம் கவர்­வ­தாக இருக்­கிறது என்று பெற்­றோரும் மாண­வர்­களும் தெரி­விக்­கி­றார்­கள்.

அர­சாங்­கம் 2012ல் பல்­க­லைக்­கழக இடங்­கள் அதி­க­ரிப்பு பற்றி அறி­விப்பு விடுத்­தது. அப்­போது பல­துறைத் தொழிற்­கல்­லூரி பட்­ட­தா­ரி­களில் 20 விழுக்­காட்­டி­னர் மட்­டுமே உள்­ளூர் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் சேர்ந்து படித்­த­னர். இந்த அளவு 2019ல் 30 விழுக்­கா­டா­கக் கூடி­யது.

கடந்த ஏழு ஆண்டுகளில் உரு­வாக்­கப்­பட்ட பெரும்­பாலான புதிய பல்­க­லைக்­க­ழக இடங்­களைப் பல­துறைத் தொழிற்­கல்­லூரி பட்­ட­யப் படிப்பு முடித்த மாண­வர்­கள் எடுத்­துக்­கொண்­டனர்.

இவ்­வே­ளை­யில், தொழில் முனைப்­புள்ள தங்­க­ளு­டைய 17 வயது மகன் இன்று ‘ஓ’ நிலை தேர்ச்சி சான்­றி­தழ்­க­ளைப் பெறு­கிறார் என்­றும் அவர் நீ ஆன் பல­துறைத் தொழிற்­கல்­லூ­ரி­யில் சேர்ந்து வங்கி, நிதித்­துறை படிக்க விரும்­பு­கி­றார் என்­றும் பட்­ட­தா­ரி­களான ஆர். மல்­லிகா, 46, என்ற இல்­ல­த்­தரசி­யும் அவ­ரு­டைய கண­ வ­ரும் நேற்று தெரி­வித்­த­னர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon