1. 'ஸ்டார் வார்ஸ்' கண்காட்சி
பிரபல 'ஸ்டார் வார்ஸ்' திரைப்படங்களில் வரும் கதாபாத்திரங்களின் உருவங்கள், ஆடைகள், மேடைப் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்டுள்ள ஒரு கண்காட்சி இம்மாத இறுதியில் சிங்கப்பூருக்கு வரவுள்ளது.
மரினா பே சேண்ட்சில் உள்ள ஆர்ட்சைன்ஸ் அரும்பொருளகத்தில் நடைபெறும் இந்தக் கண்காட்சியில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் உள்ள லூக்கஸ் அரும்பொருளகத்தைச் சேர்ந்த சுமார் 200 பொருட்கள் காட்சிக்கு வைக்கப்படும். 'டார்த்-வேடர்', 'ஆர்2-டி2', 'சியூபெக்கா', 'போபா பெட்', 'யோடா' உள்ளிட்ட கதாபாத்திரங்களின் ஆடைகளும் காட்சிக்கு வைக்கப்படும்.
இதற்கான நுழைவுச்சீட்டுகளை இம்மாதம் 15ஆம் தேதி முதல் மரினா பே சேண்ட்சில் இருந்தும் இணையம் மூலமாகவும் வாங்கலாம்.
எங்கு: மரினா பே சேண்ட்ஸ்
எப்போது: ஜனவரி 30 முதல் ஜூன் 13 வரை
கட்டணம்: $25 (பெரியவர்களுக்கு)
$80 (இரண்டு பிள்ளைகள், இரண்டு
பெரியவர்களைக் கொண்ட குடும்பங்களுக்கு)
2. சிங்கப்பூர் கலைகள் வாரம்
300க்கும் அதிகமான கலைஞர்களும் 100க்கும் அதிகமான கலை அங்கங்களும் கொண்டுள்ள சிங்கப்பூர் கலைகள் வார நிகழ்ச்சிகள், மெய்நிகர் மற்றும் நேரடி அங்கங்களைக் கொண்டு கலவை முறையில் நடத்தப்படும்.
'விசிட் சிங்கப்பூர்' பயண வழிகாட்டுதலுக்கான செயலியின் மூலம் வாடிக்கையாளர்கள் இந்தக் கலைகள் வாரத்தைப் பற்றி மேலும் தெரிந்துகொள்ளலாம்.
எங்கு: ராஃபிள்ஸ் பிளேஸ்
எப்போது: ஜனவரி 22 முதல் 30 வரை
கட்டணம்: இலவசம்
3. மெய்நிகர் மெதுவோட்டம்
தேசிய சிறுநீரக அறநிறுவனத்தின் ஏற்பாட்டில் 'ரன் இன்ஸ்பயர்ட்!' எனும் மெய்நிகர் மெதுவோட்டம் தற்போது நடைபெற்று வருகிறது. பங்கேற்பாளர்கள் மொத்தம் 55,000 கிலோ மீட்டர் தூரம் ஓடி $200,000 திரட்ட முடியும். இந்த ஓட்டத்தின் மூலம் திரட்டப்படும் நிதி சிறுநீரகச் செயலிழப்பால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் சிகிச்சைகளுக்கு கொடுக்கப்படும்.
பங்கேற்பாளர்கள் தங்களது விருப்பப்படி 5, 10, 21, 55 கிலோமீட்டர் தூரத்தைத் தெரிவு செய்யலாம்.
எங்கு: மெய்நிகர் ஓட்டம் என்பதால் நீங்கள் விரும்பிய
இடத்திலிருந்தே அதில் ஈடுபடலாம்
எப்போது: ஜனவரி 31ஆம் தேதி வரை
கட்டணம்: $9.99
4. 173ஆவது தியாகராஜ ஆராதனை
கர்நாடக சங்கீத இசைப்பிரியர்களும் மாணவர்களும் ரசிக்கும்படியான விதத்தில் 'தியாகராஜ ஆராதனை' இசை விழாவை சிங்கப்பூர் இந்திய நுண்கலைக் கழகம் நடத்தவுள்ளது.
'சிஃபாஸ்' மேடையில் நடைபெறும் இந்நிகழ்ச்சி தமிழகத்தின் திருவாரூரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் தியாகராஜ ஆராதனையைப் பாவனை செய்கிறது. இந்நிகழ்ச்சியில் சங்கீத ஆசிரியர்களும் உள்ளூர் கலைஞர்களும் பழம்பெரும் கீர்த்தனகர்த்தாவான தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதிகளை ஒருமித்தமாகப் பாடி பார்வையாளர்களுக்கு இசை விருந்து படைக்கவுள்ளனர்.
எங்கு: சிஃபாஸ், 2A ஸ்டார்லைட் ரோடு, சிங்கப்பூர் 217755
எப்போது: ஜனவரி 15ஆம் தேதி
நேரம்: காலை 9 முதல் 10.30 மணி வரை
கட்டணம்: இலவசம்
5. 'டிரைவிங் டுமாரோ'
நிலைத்தன்மையான போக்குவரத்திற்குப் பங்களிக்கும் விதமாக ஜெர்மானிய சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான 'போர்ஷ', ஜுவல் சாங்கி விமான நிலையத்தில் கண்காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருக்கிறது. காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள கிட்டத்தட்ட 15 கார் வடிவங்களில் அந்நிறுவனத்தின் முதல் சொகுசு காரான 'போர்ஷ 356' மற்றும் அந்நிறுவனத்தின் முதல் மின்சார காரான 'போர்ஷ டெய்கன்' ரக காரும் காட்சிக்கு வைக்கப்படும்.
கார்களைக் காண்பதுடன் வருகையாளர்கள், மெய்நிகர் முறையில் 'டெய்கன்' காரை ஓட்டிப் பார்க்கலாம்.
சிறுவர்களை அழைத்துவரும் வருகையாளர்கள் 'டோம் டர்கா', 'டினா டர்போ' ஆகிய பொம்மைகளுடன் சுவாரஸ்யமான கற்றல் அனுபவத்தையும் பெறலாம்.
எங்கு: ஜுவல் சாங்கி விமான நிலையம், #02-208/09
எப்போது: டிசம்பர் 18 முதல் ஜனவரி 16 வரை
நேரம்: காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை
கட்டணம்: இலவசம்