சுடச் சுடச் செய்திகள்

வீடு வாங்குவதில் உதவ புதிய இணையவாசல்

வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) வீடுகளை வாங்குவோருக்கும் விற்போருக்கும் உதவும் பொருட்டு புதிய இணையவாசல் தொடங்கப்பட்டு உள்ளது. 

குறிப்பாக, புதிய வீட்டைத் தேடுவோருக்கு விற்பனைக்குத் தயாராக உள்ள வீவக வீடுகளைப் பற்றிய தகவல்களை HDB Flat Portal என்னும் புதிய இணையவாசல் கொண்டிருக்கும். 

வீட்டின் விலை, கடன் பெறுவது தொடர்பான தகவல்கள் ஆகியவற்றோடு இனி விற்பனைக்கு வரவிருக்கும் வீடுகளைப் பற்றிய விவரமும் அதில் அடங்கி இருக்கும் என தேசிய வளர்ச்சி அமைச்சர் டெஸ்மண்ட் லீ தமது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார். 

இணையவாசல் இன்று தொடங்கி கட்டம் கட்டமாக விவரங்களை உள்ளடக்கும். வீட்டை விற்க விரும்புவோர் மதிப்பீட்டைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ற விலையை நிர்ணயிக்கவும் தங்களது பேட்டையைச் சுற்றி உள்ள வீடுகளின் முந்தைய விற்பனைப் பரிவர்த்தனைகளைத் தெரிந்துகொள்ளவும் இணையவாசல் உதவும். வீட்டின் மதிப்பு, மத்திய சேம நிதியிடம் திருப்பிச் செலுத்த வேண்டிய தொகை முதலியவற்றை இணையவாசலில் இணைக்கப்பட்டிருக்கும் கணக்கீட்டுக் கருவியைப் பயன்படுத்தித் தெரிந்துகொள்ளலாம்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon