சிங்கப்பூரில் இம்மாத இறுதியில் இருந்து முதியோருக்குத் தடுப்பூசி

தடுப்­பூசி நட­வ­டிக்­கை­களை அர­சாங்­கம் முடுக்­கி­விட்­டுள்­ள­தால் முன்­ன­தா­கவே, அதா­வது இம்­மாத இறு­தி­யில் இருந்தே முதி­ய­வர்­கள் கொவிட்-19 தடுப்­பூசி பெறத் தொடங்­கு­வர் என்று கல்வி அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்து உள்­ளார்.

தடுப்­பூ­சிக்கு முன்­ப­திவு செய்ய அவர்­களுக்கு உதவி வழங்­கப்­படும் என்று திரு வோங் கூறி­னார்.

பிப்­ர­வரி மாதத்­தில் இருந்து 70 வயது மற்­றும் அதற்­கும் மேற்­பட்ட முதி­ய­வர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­படும் என்று அர­சாங்­கம் முன்­ன­தாக அறி­வித்­தி­ருந்­தது.

இந்­நி­லை­யில், “இம்­மாத இறு­தி­யில் இருந்து முதி­ய­வர்­க­ளுக்­கான தடுப்­பூ­சித் திட்­டம் தொடங்­கப்­படும். முன்­ப­திவு முறை மூல­மாக அரு­கி­லுள்ள பல­துறை மருந்­த­கங்­கள், பொதுச் சுகா­தார ஆயத்­த­நிலை மருந்­த­கம் அல்­லது தடுப்­பூசி மையத்­தில் அவர்­க­ளுக்­குத் தடுப்­பூசி போடப்­படும்,” என்று கொரோனா தொற்­றுக்கு எதி­ரான அமைச்­சு­கள்நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான திரு வோங் சொன்­னார்.

குவோங் வை ஷியு மருத்­து­வ­ம­னை­யில் அமைச்­சர் வோங் நேற்று ஃபைசர் - பயோ­என்­டெக் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­டார்.

முன்­ப­திவு முறை மூலம் தடுப்­பூ­சி­கள் வீணா­வது தடுக்­கப்­படும். தடுப்­பூ­சி­கள் தயார்­நி­லை­யில் வைக்­கப்­பட்டு, பின் தடுப்­பூசி போட எவ­ரும் வர­வில்லை எனில் அவை வீணா­கி­வி­டும்.

எப்­போது முதல் தடுப்­பூ­சிக்கு முன்­ப­திவு செய்­து­கொள்­ள­லாம் எனும் தக­வல் கடி­தங்­கள் மூல­மாக முதி­ய­வர்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­படும் என்று திரு வோங் தெரி­வித்­தார்.

இணை­யம் வழி­யாக முன்­ப­திவு செய்ய முதி­ய­வர்­க­ளுக்கு உத­வும் வகை­யில் தொண்­டூ­ழி­யர்­க­ளுக்­குப் பயிற்சி அளிக்­கப்­படும். வீட­மைப்பு வளர்ச்­சிக் கழ­கப் பேட்­டை­களில் வெவ்­வேறு மொழி­களில் தக­வல் பரப்­பப்­படும்.

முதி­ய­வர்­க­ளுக்­குப் போட்ட பிறகு, மக்­கள்­தொ­கை­யின் மற்ற பிரி­வி­ன­ருக்­கும் படிப்­ப­டி­யா­கத் தடுப்­பூசி வழங்­கப்­படும். அது கட்­டம் கட்­ட­மா­க­வும் தடுப்­பூசி வந்­து­சே­ரு­வதைப் பொறுத்­தும் இடம்­பெ­றும் என்று அமைச்­சர் வோங் கூறி­னார்.

“இப்­போது முதல் தடுப்­பூசி நட­வ­டிக்­கை­கள் குறிப்­பி­டத்­தக்க அளவு விரை­வாக இடம்­பெ­றும் என எதிர்­பார்க்­கி­றோம். தங்­களுக்­குத் தடுப்­பூசி கிடைக்­கும்­போது அதைப் போட்­டுக்­கொள்­ளும்­படி மீண்­டும் ஒவ்­வொ­ரு­வ­ரை­யும் ஊக்­கு­விக்­கி­றோம்,” என்­றார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!