தேசிய மின்னிலக்கப் பதிவு முறையான 'சேஃப்என்ட்ரி' இவ்வார பிற்பகுதியில் கடல் துறையினருக்கும் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. அதன்பொருட்டு 'சேஃப்என்ட்ரி அட் சீ' என்னும் தளம் மரினா சவுத், வெஸ்ட் கோஸ்ட் போன்ற படகுத் துறை களில் அறிமுகமாகும்.
வேலை காரணமாக கப்பல் பயணம் மேற்கொள்வதோடு சிங்கப்பூரின் நங்கூரத்
தளத்தில் நிறுத்தப்படும் கப்பலில் வேலை செய்யும் ஊழியர்களின் தொடர்புத் தடயங்களை அறிய இந்த விரிவாக்கம் உதவும் என போக்குவரத்து, வெளியுறவு மூத்த துணை அமைச்சர் சீ ஹொங் டாட் நேற்று தெரிவித்தார். அண்மையில் கடல் துறையில் இரண்டு கொவிட்-19 சம்பவங்கள் பதிவாயின. அவர்களில் ஒருவர் நிரந்தரவாசி, மற்றவர் 55 வயது சிங்கப்பூரர்.

