வீட்டு அறைகலன்களை விற்கும் பெரும்கடையான கோர்ட்ஸின் கிளை, 'தி ஹீரன்' வர்த்தகக் கட்டடத்தில் திறக்கவுள்ளது. முன்னர் அந்த இடத்தில் இருந்த ராபின்சன் கடை கடந்த மாதம் வெளியேறிவிட்டது.
ஆர்ச்சர்ட் ரோடு வட்டாரத்தில் உள்ள கோர்ட்ஸின் ஆகப் பிரதான கிளையான இது, 'தி ஹீரன்' கட்டடத்தின் எல்லா ஆறு மாடிகளிலும் இயங்கும். 2022ஆம் ஆண்டின் முதற் காலாண்டில் திறக்கவுள்ள இந்தக் கிளை, சிங்கப்பூரின் ஆகப் பெரிய கோர்ட்ஸ் கிளையாகத் திகழவுள்ளது.
தெம்பனீஸ் கடையைவிட இன்னும் பெரிதாக 189,000 சதுர அடி பரப்பளவில் அமைக்கப்படும் இந்தக் கடை இருக்கும்.
2019ஆம் ஆண்டில் ஜப்பானிய நிறுவனமான நொஜிமா கார்பரேஷன் கோர்ட்ஸ் நிறுவனத்தை சொந்தமாக்கிக்கொண்டது.

