கொவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு பற்றிய ஒலிபரப்பு

கொவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு பற்றிய ஒலிபரப்பு

1 mins read

சிங்கப்பூரர்கள் இரு வாரங்களுக்கு ஒரு முறை புதன்கிழமைகளில் கொவிட்-19 தடுப்பூசி பாதுகாப்பு பற்றிய விவரங்களைச் செவிமடுக்கலாம்.

ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் ஏற்பாட்டில் ஒலிபரப்பாகும் அந்தத் தொடரில், டியூக்-என்யுஎஸ் மருத்துவத் துறையின் பேராசிரியர் உய் எங் யோங் சிறப்புப் பிரமுகராகக் கலந்துகொண்டு கொவிட்-19 தடுப்பூசியின் பாதுகாப்பு பற்றி விளக்கம் அளிப்பார்.

அவர் தடுப்பூசியின் அறிவியல் இயல்புகளை, தன்மைகளைப் பற்றி எடுத்துக் கூறுவார். அந்த ஊசியைப் போட்டுக்கொள்வதால் வேண்டாத விளைவுகள் ஏற்படலாம் என்று பொது மக்களிடம் நிலவும் அச்சம் தேவையில்லை என்பதை எல்லாம் அந்த ஒலிபரப்பை செவிமடுப்போர் நன்கு புரிந்துகொள்ளலாம்.

அதோடு, இங்கு அனுமதிக்கப்பட்டுள்ள ஊசி மருந்துகள் எந்த அளவுக்கு வேறுபட்டவையாக, பாது காப்பானதாக இருக்கும் என்பதைப் பற்றியும் அவர் விவாதிப்பார். இந்த ஒலிப்பதிவுத் தொடரைச் செவிமடுக்க Health Check Podcast ஒலிவழிச் செயலிகளுடன் இணையுங்கள்.

உங்களை எந்த அளவுக்கு இவை கவர்கின்றன என்பதை மதிப்பிடுங்கள்.

Channel: https://str.sg/JWaN;

Apple Podcasts: https://str.sg/JWRX; Spotify: https://str.sg/JWaQ; Website: http://str.sg/stpodcasts; Google Podcasts: https://str.sg/J6Wv; Feedback to: podcast@sph.com.sg;

Read Joyce Teo's stories: https://str.sg/JbxN