தாயைத் தாக்கிய மகனுக்கு 63 மாதம் சிறை

ஆட­வர் ஒரு­வர், ஏடி­எம் இயந்­தி­ரத்­தில் பணம் எடுப்­ப­தற்­கான ரக­சிய எண்ணை தெரி­விக்­க­வில்லை என்­ப­தற்­காக திரு­வாட்டி யூனிஸ் சாங் சியூ ஜியோக் என்ற தனது தாயாரை அவ­ரு­டைய ஊன்­று­கோலால் அடித்­தார்.

ரக­சிய எண்­ணைத் தர­வில்லை என்­றால் கத்­தியை எடுத்து எல்லா விரல்­க­ளை­யும் வெட்­டி விடு­வேன் என்று கூட அந்த 77 வயது முதிய மாதை அந்த ஆட­வர் மிரட்­டி­னார்.

மகன் அடித்த அடி தாங்­க­மு­டி­யா­மல் அடுத்த நாள் படுக்­கை­யை­விட்டு அந்த தாயா­ரால் எழ முடி­ய­வில்லை. தரை­யில் ஊர்ந்­து­கொண்டு­தான் அவ­ரால் நகர முடிந்­தது. பெற்ற தாயையே தாக்­கிய ஏட்­ரி­யன் யாப் யின் லியூங், 56, என்ற அந்த ஆட­வ­ருக்கு ஐந்து ஆண்டு மூன்று மாதங்­கள் (63 மாதங்கள்) சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.

வேண்­டு­மென்றே தன் தாயா­ருக்குக் காயம் விளைவித்து அவ­ரி­டம் கொள்­ளை­ய­டித்­தது, புலன்­வி­சா­ர­ணைக்­காக போலி­சி­டம் முன்­னி­லை­யா­கத் தவ­றி­யது ஆகிய குற்­றச்­சாட்­டு­க­ளின் பேரில் அவர் குற்­றத்தை ஒப்­புக்­கொண்­டார்.

போலி­ சிங்­கப்­பூர் பாஸ்­போர்ட் ஒன்றை வைத்­தி­ருந்­த­தா­கக் கூறும் மற்­றொரு குற்­றச்­சாட்டு கவ­னத்­தில் எடுத்­துக்­கொள்­ளப்­பட்­டது.

யாப்­புக்கு விதிக்­கப்­பட்ட சிறைத்­தண்­டனை, அவர் முதன்­மு­த­லாக விசா­ர­ணைக் காவ­லில் வைக்­கப்­பட்ட 2019 அக்­டோ­பர் 31ஆம் தேதி முதல் தொடங்­கும்.

யாப், 2018 அக்­டோ­பர் 16ஆம் தேதி தன்­ தாயா­ரின் ஏடி­எம் கணக்­கில் இருந்து தனக்குப் பணம் வேண்­டும் என்று சொல்லி ரக­சிய எண்­ணை கேட்டார்.

அந்த மாது மறுத்­து­விட்­டார். அத­னால் கோப­ம­டைந்த யாப், ஊன்று­கோ­லைப் பிடுங்கி மாதை தாக்­கி­னார். அவரை எட்டி உதைத்­தார், ஏறி மிதித்­தார், முடியை பிடித்து இழுத்­தார், கத்­தியை எடுத்து எல்லா விர­லை­யும் வெட்டி­வி­டு­வேன் என்று மிரட்­டி­னார். பயந்து­போன அந்­தத் தாயார் ரக­சிய எண்­ணைக் கொடுத்­து­விட்­டார். போலிசை கூட அழைக்க தெம்பு இல்­லா­மல் அந்­தத் தாயார் படுக்­கைக்­குச் சென்­று­விட்­டார். தாயா­ரின் கணக்­கில் இருந்து யாப் $2,000 எடுத்­துக்­கொண்­டார்.

அடுத்த நாள் காலை­யில் படுக்­கை­யை­விட்டு அந்­தத் தாயா­ரால் எழ முடி­ய­வில்லை. எப்­ப­டியோ ஊர்ந்து தரை­யில் நகர்ந்து வந்து பக்­கத்து வீட்­டுக்­கா­ரரை உத­விக்கு அழைத்­தார். போலி­சி­டம் புகார் தெரி­விக்­கப்­பட்­டது. பாதிக்­கப்­பட்ட முதிய மாது 36 நாட்­கள் மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்றார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!