சிங்கப்பூரில் புதிதாக 30 கொவிட் சம்பவங்கள், சமூகத்தில் ஒரு தொற்று சம்பவம்

சிங்கப்பூரில் புதிதாக 30 கொவிட் சம்பவங்கள், சமூகத்தில் ஒரு தொற்று சம்பவம்

1 mins read
3cc071fb-b420-44ff-930c-165ca41a5f00
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

இன்று (ஜனவரி 15) நண்பகல் நேரத்தில் 30 புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டது.

சிங்கப்பூரில் மொத்த கொவிட்-19 சம்பவ எண்ணிக்கை 59,059ஐ ஏட்டியுள்ளது.

இன்று பதிவு செய்யப்பட்டுள்ள சம்பவங்களில் 29 வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள். அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் அல்லது கட்டாய இல்லத்தனிமை உத்தரவை நிறைவேற்றி வருகின்றனர் என்பதை சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.

ஒரு சம்பவம் சமூக அளவில் ஏற்பட்ட சம்பவம். வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் எந்த சம்பவமும் பதிவாகவில்லை.

மேல் விவரங்கள் இன்றிரவு வெளியிடப்படும்.