'டாலியா டிரீம்ஸ்' மலர்க் கண்காட்சி தொடங்கியது

'டாலியா டிரீம்ஸ்' மலர்க் கண்காட்சி தொடங்கியது

1 mins read
96167503-58a4-407e-9e52-7f8328156ca8
மலர்க் கண்காட்சியை அதிபர் ஹலிமா யாக்கோப் பார்வையியிட்டார். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சீனப் புத்தாண்டை முன்னிட்டு கரையோரப் பூந்தோட்டங்களின் மலர்க் குவிமாடத்தில் 'டாலியா டிரீம்ஸ்' மலர்க் கண்காட்சி தொடங்கியது.

இம்முறை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள டாலியா எனும் சீமை அல்லி மலர்கள் அனைத்தும் சிங்கப்பூரிலேயே வளர்க்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கமாக 20% முதல் 50% வரையிலான டாலியா மலர்கள் இங்கு வளர்க்கப்பட்டவையாக இருக்கும். எஞ்சியவை இறக்குமதி செய்யப்படும்.

200க்கும் அதிகமான செந்நிறக் கூண்டு விளக்குகளுடன் கூடிய உருண்டை கண்காட்சியின் மைய அம்சமாகத் திகழ்கிறது. அத்துடன், இரண்டு தங்க நிறக் காளைச் சிலைகளும் எட்டுச் சீனச் சிங்கச் சிலைகளும் இடம்பெற்றுள்ளன.

அடுத்த மாதம் 21ஆம் தேதி வரை இந்த மலர்க் கண்காட்சி இடம்பெறும். காலை 9 மணியில் இருந்து இரவு 9 மணி வரை அதனைக் காண முடியும்.

சிங்கபபூர்வாசிகளுக்கான நுழைவுக் கட்டணம்: பெரியவர்களுக்கு - $10, மூன்று முதல் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் 60 வயதுக்கு மேற்பட்ட பெரியவர்களுக்கும் - $5. மேல்விவரங்களுக்கு https://www.gardensbythebay.com.sg எனும் கரையோரப் பூந்தோட்டங்களின் இணையத்தளத்தை நாடலாம்.