கடல், விமானத் துறைகளில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி

கடல், விமானத் துறைகளில் முன்களப் பணியாளர்களுக்குத் தடுப்பூசி

1 mins read
3adf4192-9b92-419d-8762-771bfce496ed
-

கடல்துறையிலும் விமானத்துறையிலும் பணியாற்றும் சுமார் 13,000 ஊழியர்கள் தங்களது கொவிட்-19 தடுப்பூசியைப் பெற பதிவு செய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் ஓங் யீ காங் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். சாங்கி விமான நிலையத்தின் நான்காவது முனையத்திற்குச் சென்றிருந்தபோது அவ்வாறு கூறிய திரு ஓங், கிருமிப்பரவலால் தரைக்குத் தள்ளப்பட்ட நம் விமானத் துறைக்குப் புத்துயிரூட்ட இந்த தடுப்பூசிகள் முக்கிய படி என அவர் கூறியுள்ளார்.

போக்குவரத்துத் துறையில் உள்ளோரில் பலருக்கு தடுப்பூசி போடப்பட்டால் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயலாற்றும் ஒரு குழு என்பது அனைவருக்கும் தெரிய வரும் என்று திரு ஓங் கூறினார். "இது நமது அடையாளத்திற்கு பெரும் அனுகூலமாக இருக்கும்," என்று அவர் குறிப்பிட்டார்.

வரும் இரண்டு மாதங்களுக்குள் இந்த இரண்டு துறைகளைச் சேர்ந்த 37,000 முன்களப் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.