விடுதிகளில் தொற்று: அச்சம் தேவையில்லை

விடுதிகளில் தொற்று: அச்சம் தேவையில்லை

1 mins read
d24f6db4-4ee3-4715-9264-48948398e0d4
-

சிங்கப்பூரில் ஒரு மாதத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்கு விடுதிகளில் கொவிட்-19 தொற்று உறுதியான சம்பவங்கள், அவ்வப்போது அங்குமிங்குமாக ஏற்படக்கூடிய ஒன்றாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் தெரிவித்ததாக ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் குறிப்பிட்டு உள்ளது.

'சீடவுன் டார்மிட்டரி' என்ற விடுதியில் தங்கி இருக்கும் ஊழியர் ஒருவருக்கு கொவிட்-19 தொற்று இருந்தது ஜனவரி 12ஆம் தேதி தெரியவந்தது. டிசம்பர் 15 முதல் அதுவரையில் வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் வேறு யாருக்கும் தொற்று இல்லை. துவாஸ் சவுத் டார்மிட்டரி என்ற விடுதியில் சனிக்கிழமையன்று ஒருவருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அவர்களுக்கு அணுக்கத் தொடர்பில் இருந்து வந்த அனைவரும் தடுத்து வைக்கப்பட்டு, தனிமைக்காலம் தொடங்கும் போதும் முடியும் போதும் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

வெளிநாட்டு ஊழியர் தங்குவிடுதியில் மேலும் பலருக்கும் தொற்று ஏற்பட்டாலொழிய அச்சம் தேவையில்லை என்று வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர். வெளிநாட்டு ஊழியர் விடுதிவாசிகளுக்கு முன்னதாக தடுப்பூசி போடலாம் என்று மற்றவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.