முதற்கட்ட சிகிச்சை பலனளிக்காதோருக்கு ரத்த பிளாஸ்மா சிகிச்சை

முதற்கட்ட சிகிச்சை பலனளிக்காதோருக்கு ரத்த பிளாஸ்மா சிகிச்சை

1 mins read
737c9920-24e0-4651-b53e-7485729d8748
படம்: ராய்ட்டர்ஸ் -

கொவிட்-19 தொற்­றி­லி­ருந்து குண மடைந்­தோ­ரி­ட­மி­ருந்து பெறப்­பட்ட ரத்த பிளாஸ்மா, கொரோனா கிருமி தொடர்­பான முதற்­கட்ட சிகிச்சை பல­ன­ளிக்­கா­தோ­ருக்­காக ஒதுக்கி வைக்­கப்­படும் என்று தொற்­று­நோய்­க­ளுக்­கான தேசிய நிலை­யம் (என்­சி­ஐடி) நேற்று தெரி­வித்­தது.

கொவிட்-19க்கு எதி­ரான எதிர்ப்பு சக்­தி­யைக் கொண்ட ரத்த பிளாஸ்மா, கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து விரை­வில் குண­மடைய அவர்­க­ளின் உட­லில் செலுத்­தப்­படும்.

முதற்­கட்ட சிகிச்சை பல­ன­ளிக்­கா­த­போது, சுகா­தார அறி­வி­யல் ஆணை­யம், டியுக்-என்­யு­எஸ் மருத்­து­வப் பள்ளி ஆகி­ய­வற்­றின் ஆத­ர­வு­டன் என்­சி­ஐடி, டான் டோக் செங் மருத்­து­வ­ம­னை­யின் கண்­கா­ணிப்­புத் திட்­டத்­தின் அடிப்­ப­டை­யில் ரத்த பிளாஸ்மா நோயா­ளி­யின் உட­லில் செலுத்­தப்­படும் என்று என்­சி­ஐ­டி­யின் மருத்­துவ இயக்­கு­நர் டாக்­டர் ஷோன் வாசு தெரி­வித்­தார்.

இத்­திட்­டத்­தின் மூலம் ஏழு பேரின் உட­லில் ரத்த பிளாஸ்மா செலுத்­தப்­பட்­டுள்­ளது என்­றா­லும் அவற்­றின் ஆற்­றல் பற்றி இது­வரை தெளி­வா­கத் தெரி­ய­வில்லை.

பிரா­ண­வாயு தேவைப்­படும் கொவிட்-19 நோயா­ளி­க­ளுக்கு பொது­வாக 'டெக்­ஸ­மெத்­த­சோன்' எனும் ஸ்டெ­ராய்­டு­களும் 'ரெம்­டெ­சி­விர்' எனும் ஆன்­டி­வை­ரல்­மருந்துகளும் கொடுக்­கப்­படும்.

"கொவிட்-19 கிரு­மித்­தொற்­றி­லி­ருந்து குண­ம­டைந்­த­வர்­களில் 27 பேர் இது­வரை ரத்த நன்­கொடை செய்­துள்­ள­னர். அவர்­க­ளின் ரத்­தம் ஓராண்டு வரை சேமித்து வைக்­கப்­படும்.

"கடுமை குறை­வான கிரு­மித்­தொற்று உள்ள நோயா­ளி­க­ளின் ரத்­தத்­தில் நடு­நி­லை­யாக்­கும் ஆன்­டி­பா­டி­கள் போதிய அள­வில் இருக்­காது. அத­னால், அவர்­களின் உட­லுக்­குப் பொருந்­தக்­கூ­டிய ரத்த நன்­கொ­டை­யா­ளர்­களைத் தேடு­வ­தில் சிர­மம் ஏற் படும். ரத்த பிளாஸ்மா பெற்ற நோயா­ளி­களில் யாருக்­கும் எந்த சிக்­க­லும் ஏற்­படவில்லை," என்­றார் டாக்­டர் வாசு.