கொவிட்-19 சூழல் காரணமாக பலர் வீட்டிலேயே இருக்கும் நிலை ஏற்பட்டது. பலர் வீட்டிலிருந்து வேலை செய்தனர், கல்வி பயின்றனர்.
இதனால் உலகளவில் 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டில் கணினி விற்பனை கிட்டத்தட்ட 13 விழுக்காடு அதிகரித்தது.
அதற்கு முந்திய ஏறத்தாழ பத்து ஆண்டுகளாக கணினிகளுக்கான விற்பனை சரிந்துகொண்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

