டிரேஸ்டுகெதர் கருவிகளைப்பெற்றுக்கொள்ள மக்கள் கூட்டம் அலைமோதியதால் அவற்றை விநியோகம் செய்வது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், 12 வாரங்கள் கழித்து, நேற்று டிரேஸ்டுகெதர் கருவிகள் 38 சமூக மன்றங்கள், நிலையங்களில் விநியோகம் செய்யப்பட்டன.
இம்முறை நீண்ட வரிசைகள் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. விநியோகம் சுமுகமாக நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

