தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சிங்­கப்­பூ­ரில் அமெரிக்கத் தூதரகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம்; ஆடவருக்கு எதிராக வழக்கு

2 mins read
e2c57a8f-c579-404a-85b3-d7260ef2aceb
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்­கப்­பூ­ரில் உள்ள அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­துக்கு வெளியே ஆர்ப்­பாட்­டம் நடத்­திய ஆட­வ­ருக்கு எதி­ராக நேற்று வழக்கு விசா­ரணை மேற்கொள்ளப்­பட்­டது.

தனி­யொ­ரு­வ­ராக இருந்து கடந்த ஆண்டு நவம்­பர் மாதம் 2ஆம் தேதி பிற்­ப­கல் நேரத்­தில் நேப்­பி­யர் சாலை­யில் உள்ள அமெ­ரிக்­கத் தூத­ர­கத்­துக்கு வெளியே சிங்­கப்­பூ­ர­ரான 45 வயது யான் ஜுன் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

அனு­மதி பெறா­மல் ஆர்ப்­பாட்­டம் நடத்­தி­ய­தா­க­வும் ஒழுங்­கற்ற முறை­யில் நடந்­து­கொண்­ட­தா­க­வும் அவர் மீது குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

அரசு ஊழி­யர் கேட்ட கேள்­விக்­குப் பதி­ல­ளிக்­க­வில்லை என அவர் மீது சுமத்­தப்­பட்­டி­ருந்த குற்­றச்­சாட்டு தள்­ளு­படி செய்­யப்­பட்­டது.

தம்­மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்­டு­களை யான் ஒப்­புக்­கொள்­ளவோ மறுக்­கவோ இல்லை. இதை­ய­டுத்து அவர் நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்­ப­டுத்­தப்­பட்­டார்.

இது­கு­றித்து நீதி­பதி அவ­ரி­டம் கேள்வி எழுப்­பி­ய­போது அவர் பதில் அளிக்­க­வில்லை.

ஜோகூர் பாரு­வில் தாம் இருந்­த­போது அமெ­ரிக்க அர­சாங்­கம் தம்மை வேவு பார்த்­த­தா­க­வும் சாங்கி சிறைச்­சாலை அடி­மை­க­ளுக்­கான முகாம் என்­றும் பிர­த­மர் லீ சியன் லூங் பதவி விலக வேண்­டும் என்­றும் வாச­கங்­கள் கொண்ட பதா­கை­களை ஆர்ப்­பாட்­டத்­தில் யான் பயன்­ப­டுத்­தி­ய­தாக நீதி­மன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

ஆர்ப்­பாட்­டம் ஏறத்­தாழ 15 நிமி­டங்­க­ளுக்கு நிகழ்ந்தது. ஆர்ப்­பாட்­டத்தை அடுத்து, பக்­கத்­தில் இருக்­கும் பேருந்து நிறுத்­தத்­துக்கு யான் சென்­றார். அங்கு அவரை போலி­சார் அணு­கி­ய­போது யான் ஒழுங்­கற்ற முறை­யில் நடந்­து­கொண்­டார் என்­றும் அத­னால் அவர் கைது செய்­யப்­பட்­டார் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

அவர் ஒழுங்­கற்ற முறை­யில் நடந்­து­கொண்­டதை போலிஸ் அதி­காரி வைத்­தி­ருந்த கேம­ரா­வில் காணொளி எடுக்­கப்­பட்­டது. காணொளிப் பதிவு நீதி­மன்­றத்­தில் காட்­டப்­பட்­டது. யான் தெரிந்தே இவற்றைச் செய்ததாக மனநலக் கழகம் தெரிவித்துள்ளது.