கொவிட்-19 சூழல் காரணமாக பெண் ஊழியர்களுக்கு நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் பரவலாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
ஆனால் இந்த அணுகுமுறையால் பெண்களுக்கு மனவுளைச்சலும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீட்டிலிருந்து வேலை செய்யும் ஊழியர்கள் தங்கள் வேலையைத் தொடர்ந்து செய்துகொண்டே இருக்கும் அபாயம் உள்ளது.
சொந்த வாழ்க்கையையும் கவனிக்க வேண்டும் என்ற புரிதல் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று சிங்கப்பூர் மகளிர் மேம்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட மெய்நிகர் கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த மெய்நிகர் கலந்துரையாடலுக்கு சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், என்டியுசியின் மகளிர் மற்றும் குடும்பப் பிரிவு ஏற்பாடு செய்தது.
கொரோனா நெருக்கடிநிலை காரணமாக நீக்குப்போக்கான வேலை ஏற்பாடுகள் நடைமுறைப்
படுத்தப்பட்டதாக மனிதவள, கல்வி துணை அமைச்சர் கான் சியாவ் ஹுவாங் தெரிவித்தார்.
இதன்மூலம் வீட்டில் வேலை செய்வது மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் பிள்ளைகள், முதியவர்
களைப் பராமரிப்பவர்களுக்கு இது நல்லதோர் ஏற்பாடாக அமைந்தது என அவர் கூறினார்.
"ஆனால் இந்தப் புதிய ஏற்பாடு சிலருக்கு மனவுளைச்சலையும் ஏற்படுத்தியுள்ளது. வீட்டிலிருந்து வேலை செய்துகொண்டே குடும்பத்தாரின் ஆதரவைப் பெறவும் புதிய நடைமுறை வழிவகுக்கிறது.
"ஆனால் ஒரே நேரத்தில் வேலையையும் செய்துகொண்டு குடும்பத்தாரையும் பார்த்துக்கொள்வது மிகவும் சிரமமிக்கது என்றும் அதனால் மனவுளைச்சல் ஏற்படுகிறது என்றும் ஊழியர்கள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்," என்று திருவாட்டி கான் தெரிவித்தார்.
இதனால் வேலை செய்ய, குடும்பத்தைப் பார்த்துக்கொள்ள, சொந்த விஷயங்களைக் கவனிக்க நேரத்தை வகுப்பது மிகவும் அவசியம் என்று மெய்நிகர் கலந்துரையாடலில் கலந்துகொண்ட ஏறத்தாழ 70 ஊழியர்களிடம் திருவாட்டி கான் கூறினார்.
வேலையிடங்களில் நல்ல மன
நலத்துடன் இருப்பது தொடர்பாக மனிதவள அமைச்சு, சிங்கப்பூர் தேசிய முதலாளிகள் சம்மேளனம், என்டியுசி ஆகியவை முத்தரப்புப் பங்காளித்துவ ஆலோசனை அறிக்கை ஒன்றை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் வெளியிட்டதை திருவாட்டி கான் சுட்டினார்.
அந்த ஆலோசனை அறிக்கை சிங்கப்பூரை சரியான பாதையில் கொண்டு செல்லும் என்றார் அவர். நீக்குப்போக்கான வேலை ஏற்பாடு களால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை எதிர்கொள்ள அது உதவும் என்றார் அவர்.

