நியாயமான பணியமர்த்தலுக்கு வர்த்தக அமைப்புகள் ஆதரவு

நியாயமான பணியமர்த்தலுக்கு வர்த்தக அமைப்புகள் ஆதரவு

2 mins read
a3e5e198-9b58-4346-9fde-df3e560c269a
படம்: எஸ்பிஎஃப் -

நியா­ய­மான பணி­ய­மர்த்­த­லுக்­கும் வேலை­வாய்ப்பு நடை­மு­றை­க­ளுக்­கும் வர்த்­த­கச் சங்­கங்­களும் வர்த்­தக, தொழிற்­ச­பை­களும் தங்­கள் ஆத­ர­வைத் தெரி­வித்­துள்­ளன.

சிங்­கப்­பூர் வர்த்­தக சம்­மே­ள­ன­மும் 29 வர்த்­த­கச் சங்­கங்­களும் வர்த்­தக, தொழிற்­ச­பை­களும் நேற்று வெளி­யிட்ட கூட்­ட­றிக்­கை­யில், தகுதிக்கு முன்­னு­ரிமை எனும் அடிப்­படை­யில் தகு­தி­யு­டைய விண்­ணப்­ப­தா­ரர்­க­ளைப் பணி­ய­மர்த்­தும் நடை­மு­றை­க­ளுக்­குத் தங்­கள் கடப்­பாட்டை உறுப்பியம் பெற்ற நிறு­வ­னங்­கள் தெரி­விக்க வேண்­டும் என்று குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தது.

நியா­ய­மான, படிப்­ப­டி­யான வேலை நடை­மு­றை­க­ளுக்­கான முத்­த­ரப்­புப் பங்­கா­ளித்­து­வத்­தின் நியா­ய­மான பரி­சீ­ல­னைக் கட்­ட­மைப்பு மற்­றும் முத்­த­ரப்பு வழி­காட்டி களைத் தாங்­கள் கடைப்­பி­டித்து வரு­வ­தாக உறுப்பியம் பெற்ற நிறு­வ­னங்­கள் தெரி­வித்­தன.

ஒரு வலு­வான சிங்­கப்­பூர் ஊழி­ய­ர­ணியை உரு­வாக்கி, மேம்­ப­டுத்­து­வதே அதன் முக்­கிய கடப்­பாடு.

29 வர்த்­த­கச் சங்­கங்­களும் வர்த்­தக, தொழிற்­ச­பை­களும் பன்­னாட்டு நிறு­வ­னங்­கள், பெரிய உள்­ளூர் நிறு­வ­னங்­கள், சிறிய நடுத்­தர நிறு­வனங்­கள் ஆகி­ய­வற்­றைப் பிர­தி­நிதிக்­கின்­றன.

சிறிய நடுத்­தர நிறு­வ­னங்­கள் சங்­கம், சிங்­கப்­பூர் பிரிட்­டிஷ் வர்த்­தக சபை, சிங்­கப்­பூர் வங்­கி­கள் சங்­கம் ஆகி­ய­வை­யும் அவற்­றுள் அடங்­கும்.

"நாங்­கள் மூன்று மூலக் கொள்­கை­களில் நம்­பிக்கை கொண்­டுள்­ளோம். நேர்­ம­றை­யான வேலை­யிட உற­வு­களை மேம்­ப­டுத்­து­தல், நியா­ய­மான பணி­ய­மர்த்­த­லைக் கடைப்­பி­டித்­தல், வாழ்க்­கைத்­தொ­ழி­லில் உயர வாய்ப்­பு­களை வழங்­கு­தல் ஆகி­ய­வையே அவை," என்று கூட்­ட­றிக்­கை­யில் வர்த்­த­கச் சங்­கங்­களும் வர்த்­தக, தொழிற்­ச­பை­களும் வலி­யு­றுத்­தின.

நேர்­ம­றை­யான வேலை­யிட உற­வு­களை மேம்­ப­டுத்­து­தல் பற்றி குறிப்­பிட்ட வர்த்­த­கச் சங்­கங்­கள், வர்த்­தக, தொழிற்­ச­பை­கள், "இதில் வேலை என்­பது முத­லா­ளி­க­ளுக்­கும் ஊழி­யர்­க­ளுக்­கும் மற்­றும் ஊழி­யர்­க­ளுக்­கும் சிங்­கப்­பூ­ரி­லும் மற்ற நாடு­க­ளி­லும் உள்ள பணிக் குழுக்­க­ளுக்­கும் இடை­யி­லான ஒத்­து­ழைப்பு.

"ஊழி­யர்­க­ளி­டத்­தில் பன்­மு­கத்­தன்மை இருப்­பது புத்­தாக்­கத்தை, ஆக்­க­பூர்­வ­மான யோச­னை­களை வெளிப்­ப­டுத்த, திற­மை­யான குழு உணர்­வை­யும் வர்த்­தக வளர்ச்­சியை மேம்­ப­டுத்த விழை­யும் வர்த்­த­கங்­க­ளுக்கு முக்­கி­யம்.

"அடுத்த முனை­யில், முத­லா­ளி­கள் தங்­கள் ஊழி­யர்­க­ளு­டன் இணைந்து வேலை­யி­டச் சூழ­லில் நேர்­ம­றை­யான விளை­வு­களை ஏற்­படுத்த முன்­னு­தா­ர­ண­மா­கக் திகழ வேண்­டும்.

"பன்­மு­கத்­தன்­மை­யைக் கொண்­டா­டு­தல், தனி­ந­பர்­களை மதித்­தல், பயிற்­சி­ய­ளித்­தல், சரி­ச­ம­மான வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­திக் கொடுத்­தல் ஆகி­ய­வற்றை வேலை­யி­டச் சூழல் கொண்­டி­ருக்க வேண்­டும்.

இதற்­கி­டையே, ஊழி­யர்­களும் 'ஒவ்­வொருநாளும் நம்­பிக்­கை­யான மனப்­போக்­கு­டன்', நேர்­ம­றை­யான வேலை­யி­டச் சூழலை உரு­வாக்க முத­லா­ளி­க­ளு­டன் ஒத்­து­ழைத்து பணி­யாற்ற வேண்­டும்," என்­றும் விவ­ரித்­தன.

நியா­ய­மான பணி­ய­மர்த்­தல் பற்றி குறிப்­பிட்ட வர்த்­த­கச் சங்­கங்­கள், வர்த்­தக, தொழிற்­ச­பை­கள், "முத­லா­ளி­கள் ஒவ்­வொரு வேலைக்­கும் மிக­வும் தகு­தி­யா­ன­வர்­க­ளைத் தகு­திக்கு முன்­னு­ரிமை கொடுத்து அமர்த்த வேண்­டும்," என்­றும் அவை கூறின.

இறு­தி­யாக, வாழ்க்­கைத்­தொ­ழி­லில் உயர வாய்ப்­பு­களை வழங்­கு­தல் பற்றி குறிப்­பிட்ட அவை, "முத­லா­ளி­கள் தங்­கள் ஊழி­யர்­கள் வாழ்க்­கைத்­தொ­ழி­லில் முன்­னேற கற்­றல் மற்­றும் திறன் மேம்­பாட்டு வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தர வேண்­டும். அதன் மூலம் முன்­னேறி அவர்­கள் பின்­னர் அதே நிறு­வனத்­தின் தலை­மைத்­து­வப் பணி­களை வழங்­க­லாம்," என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.