கொவிட்-19 பயண முன்பரிசோதனைக்கு புதிய இணையவாசல்

சிங்­கப்­பூர், ஜகார்த்தா, மேடான் நக­ரங்­களில் இருந்து சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ், சில்க்­ஏர் ஆகிய விமா­னங்­களில் பய­ணம் செய்­வோர் புதிய வச­தி­யைப் பெற உள்­ள­னர். பய­ணத்­திற்கு முந்­திய கொவிட்-19 கிரு­மிப் பரி­சோ­த­னையை அவர்­கள் செய்­து­கொள்­ள­வும் அதன் முடிவை அறிந்­து­கொள்­ள­வும் இணை­ய­வா­சல் ஒன்று தொடங்­கப்­பட்டு உள்­ளது.

இந்த முன்­னோ­டித் திட்­டம் அனைத்­து­ல­கப் பயண மீட்­பில் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் குழு­மம் மேற்­கொண்டு இருக்­கும் ஆக அண்­மைய முயற்சி. கொள்­ளை­நோ­யால் நிலை­குத்­திப்போன விமா­னப் பய­ணத்­து­றையை மெல்ல மெல்ல மீட்­

ப­தற்­கான முயற்­சி­கள் பர­வ­லாக நடை­பெற்று வரு­கின்றன.

பல வச­தி­களை உள்­ள­டக்­கிய புதிய இணை­ய­வா­சல் நேற்று தொடக்­கம் கண்­டது. வெற்­றி­க­ர­மான செயல்­பாட்­டைப் பொறுத்து அடுத்த சில மாதங்­களில் மேலும் பல நக­ரங்­க­ளுக்­கும் இதனை சிங்­க­பூர் ஏர்­லைன்ஸ், சில்க்­ஏர் கட்­ட­மைப்­பு­கள் விரி­வு­ப­டுத்­தும்.

விமா­னப் பய­ணி­கள், பய­ணத்­துக்கு முந்­திய கொவிட்-19 பிசி­ஆர் பரி­சோ­தனை வழங்­கப்­படும் வச­தி­க­ளின் பட்­டி­ய­லில் இருந்து ஒன்­றைத் தேர்ந்­தெ­டுத்து அதற்கு முன்­

ப­திவு செய்­யும் வசதி இணை­ய­வா­ச­லில் இருக்­கும். பய­ணத்­திற்கு 48 மணி நேரம் முன்­ன­தா­கவே அவர்­கள் பிசி­ஆர் பரி­சோ­த­னை­யை­யும் அது தொடர்­பான மற்ற பரி­சோ­த­னை­யை­யும் செய்­து­கொள்­வ­தற்­கான ஏற்­பா­டு­க­ளுக்கு அதில் வசதி இருக்­கும்.

அந்­தப் பரி­சோ­த­னை­க­ளின் முடி­வு­கள் அதே இணை­ய­வா­சல் மூலம் 36 மணி நேரங்­க­ளுக்­குள் பய­ணி­க­ளுக்கு அனுப்பி வைக்­கப்­படும். விமான நிலை­யத்­தில் பய­ணத்தை உறுதி செய்­யும்­போது பரி­சோ­தனை முடி­வு­க­ளைக் காட்ட அது எளி­தாக இருக்­கும்.

விமான நிலைய பயண ஏற்­பாட்டு அலு­வ­லர்­களும் சிங்­கப்­பூர் குடி­நு­ழைவு அதி­கா­ரி­களும் விரை­வுத் தக­வல் குறி­யீடு (க்யூ­ஆர்) மூலம் அந்­தப் பரி­சோ­தனை முடி­வு­க­ளைத் தெரிந்து பயண ஒப்­பு­தல் வழங்க இணை­ய­வா­சல் உத­வி­பு­ரி­யும். இந்த விவ­ரங்­களை சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் தெரி­வித்து உள்­ளது.

பய­ணி­க­ளின் கொவிட்-19 நிலை­மை­யைக் காட்­டும் மின்­னி­லக்க சுகா­தார அட்­டையை இணைய வாசலில் சேமித்து வைக்க முடி­யும். கடந்த டிசம்­பர் மாதம் முதல் சிங்­கப்­பூர் ஏர்­லைன்ஸ் மேற்­கொண்டு வரும் மின்­னி­லக்­கச் சுகா­தார சரி­பார்ப்பு நடை­மு­றை­யின் ஒரு பகு­தி­யாக இந்­தப் புதிய முயற்சி எடுக்­கப்­பட்டுள்­ள­தாக அது கூறி­யது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!