நாடாளுமன்றத்திற்கான முக அடையாளத் திட்டம் நிறுத்தம்

தற்­போ­தைய கொவிட்-19 நிலைமை, நாடா­ளு­மன்ற அமர்­வு­க­ளின்­போது அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட பாது­காப்பு தூர இடை­வெளி நட­வ­டிக்­கை­கள் ஆகி­ய­வற்­றால், நாடா­ளு­மன்­றத்­தில் மன்ற உறுப்­பி­னர்­க­ளின் வரு­கையை கண்­கா­ணிக்க மேற்­கொள்­ளப்­ப­ட­வி­ருந்த முக அடை­யாள முறைக்­கான திட்­டங்­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

தி ஸ்ட்­ரெய்ட்ஸ் டைம்­ஸின் கேள்­விக்குப் பதி­ல­ளித்த நாடா­ளு­மன்­றச் செய­லா­ளர் அலு­வ­ல­கம், கொவிட்-19 சூழல் உள்­ளிட்ட தற்­போ­தைய நிலை­மை­கள் நாடா­ளு­மன்­றத்­தின் நேரடி செயல்­பா­டு­க­ளுக்கு தொழில்­நுட்­பத்­தைப் பயன்­படுத்­து­வ­தில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது எனக் குறிப்­பிட்­டது.

எடுத்­துக்­காட்­டாக, நாடா­ளு­மன்ற அமர்­வு­க­ளுக்கு பாது­காப்­பான தூர இடை­வெளி நட­வ­டிக்­கை­களை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்ள நிலை­யில், இப்­போது கேல­ரி­க­ளி­லும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அமர்­கின்­ற­னர். இது தேவை­யான இடங்­கள், அடை­யா­ளம் காணும் சாத­னங்­க­ளின் எண்­ணிக்­கை போன்றவற்றைப் பாதித்­துள்­ளது.

இதைக் கருத்­தில் கொண்டு, இந்த ஏலத்­துக்­கான திட்­டத் தேவை­கள், விவ­ரக்­கு­றிப்­பு­கள் காலத்­துக்கு ஏற்­றவை அல்ல என்­றும், தேவை, செல­வின் மதிப்பு இரண்­டுக்­கும் முழு­மை­யான பல­னில்லை என்­றும் நாடா­ளு­மன்ற செய­ல­கம் தீர்­மா­னித்­துள்­ளது என அது கூறி­யது.

2019 நவம்­ப­ரில் அர­சாங்க கொள்­மு­தல் இணை­ய­வா­ச­லான ஜீபி­ஸில் ஏலக்­குத்­தகை ஆவ­ணங்­க­ளின்­படி, நாடா­ளு­மன்ற செய­ல­கம் நேர­டி­யான அடை­யா­ளம் காணும் முறைக்கு மாற்­றாக, முக அடை­யாளப் பதிவு முறையை செயல்­ப­டுத்தத் திட்­ட­மிட்­டி­ருந்­தது. இந்த ஏலக்­குத்­த­கை விண்­ணப்­பத்­துக்­கான இறுதி நாள் 2019 டிசம்­பர் 2 ஆகும்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon