சிறகை விரிக்க முடியாமல் தவிக்கும் விமானத் துறையில் $40 மில்லியன் முதலீடு

கிரு­மிப் பர­வ­லால் பாதிக்­கப்­பட்டு சிறகை சுதந்­தி­ர­மாக விரிக்க முடி­யா­மல் தவிக்­கும் விமா­னத் துறைக்கு உதவ நாற்­பது மில்­லி­யன் வெள்ளி முதலீடு அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

கொவிட்-19க்கு பிந்­திய காலத்­தில் விமா­னங்­க­ளின் பரா­ம­ரிப்பு பணி­களை மேம்­ப­டுத்த அடுத்த மூன்று ஆண்­டு­களில் இந்த நிதி செல­வி­டப்­படும்.

இத­னால் சாங்கி விமான நிலை­யத்தைக் கடந்து செல்­லும் பய­ணி­ளின் நேரம் குறை­யும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

விமா­னங்­களில் ஏற்­படும் கோளா­று­களை சிறந்த முறை­யில் கண்­டு­பி­டிக்­க­வும் இந்த நிதி பயன் ­ப­டுத்­தப்­படும்.

எஸ்­ஐஏ இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னம் இந்த முத­லீட்டை நேற்று அறி­வித்­தது.

தனது ஊழி­யர்­க­ளின் வேலையை எளி­தாக்­க­வும் விரை­வாக செய்து முடிக்­க­வும் திட்­டத்­தின் இரண்­டா­வது கட்­ட­மாக இந்த நிதி அறிவிக்கப்பட்டுள்ளது.

கிரு­மிப் ­ப­ர­வல் சூழ்­நி­லை­யில் விமா­னங்­க­ளின் சேவை குறை­வாக இருந்­தா­லும் பணி­க­ளுக்­கான நடை­மு­றை­களை மேம்­ப­டுத்த அது இலக்கு நிர்­ண­யித்­துள்­ளது.

அடுத்த கட்­டத்­தில் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளின் வேலை­களை செம்­மை­யாக்­கு­வ­தற்­கான வழி­கள் ஆரா­யப்­படும். பரா­ம­ரிப்புப் பணி­கள் தொடர்­பான வெவ்­வேறு தர­வு­களை கைபேசி செய­லில் ஒருங்­கி­ணைப்­பது திட்­டத்­தின் ஒரு பகு­தி­யா­கும்.

முதல் கட்­ட­மாக ஐம்­பது மில்­லி­யன் நிதி அறி­விக்­கப்­பட்­டது. சாத­னங்க­ளை­யும் கரு­வி­க­ளை­யும் மேம்­ப­டுத்த அந்த நிதி பயன்­ப­டுத்­தப்­படும் என்று தெரி­விக்­கப்­பட்­ டது.

இது பற்றி விவரித்த எஸ்­ஐஏ இன்­ஜி­னி­ய­ரிங் நிறு­வ­னத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி இங் சின் ஹுவி, கிரு­மிப் பர­வ­லுக்­குப் பிந்­திய காலத்தில் வாய்ப்­பு­களை சிறந்த வகை­யில் பயன் ­படுத்­திக்கொள்ள அறி­விக்­கப்­பட்டு உள்ள திட்­டங்­கள் உத­வும் என்று குறிப்­பிட்­டார்.

“உற்­பத்­தித் திற­னைப் பெருக்கி புத்­தாக்­கத்­து­டன் செயல்­பட்டு மேம்­பட்ட போட்­டித் திற­னு­டன் கிரு­மிப் பர­வல் நெருக்­க­டி­யி­லி­ருந்து மீண்டு வர முயற்சி செய்­வோம்,” என்­றும் அவர் கூறினார்.

‘SmartMX’ என்று அழைக்­கப்­படும் கைபேசி செய­லி­யில் குறிப்­பிட்ட விமா­னங்­களில் ஏற்­படும் கோளா­று­கள், பரா­ம­ரிப்பு கையே­டு­கள், அதற்­குத் தேவை­யான கரு­வி­கள் போன்ற விவ­ரங்­கள் ஒருங் கிணைக்கப்படும்.

“இத­னால் பழு­து­பார்ப்பு பணி ­க­ளுக்கு நேரம் குறை­யும். இதன் மூலம் விரை­வாக விமா­னங்­களை சேவை­யில் ஈடு­ப­டுத்தி பய­ணி ­களின் காத்­தி­ருப்பு நேரத்­தைக் குறைக்க முடி­யும்,” என்று மேலும் அவர் கூறினார்.

இரண்டு புதிய சாத­னங்­களும் நேற்று அறி­மு­கம் செய்­யப்­பட்­டன. விமான இயந்­தி­ரங்­களை தூக்­கும் சாத­ன­மும் அவற்­றில் ஒன்று.

இது, மனி­த­வ­ளத்­தைக் குறைப் ­ப­தோடு இயந்­தி­ரத்தை மாற்­று­வ­தற்­கான நேரம் 50 விழுக்­காட்­டுக்கு மேல் குறையும். கிரு­மி­களை அழிக்­கும் தெளிப்­பான் மற்­றொரு சாத­ன­மா­கும்.

இந்த நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற போக்­கு­வ­ரத்து அமைச்­சர் ஓங் யி காங், விமா­னத் துறையை எதிர்­கா­லத்­துக்கு தயார்படுத்த திட்­டங்­கள் உத­வும் என்றார்.

தடுப்­பூ­சி­கள் போடப்­பட்டு வரு­வ­தை­யும் விமா­னச் சேவை­கள் தொடங்­கு­வ­தற்­காக எடுக்­கப்­படும் முயற்சிகளையும் அவர் சுட்­டிக் காட்­டி­னார்.

“பேரி­ட­ரின் நடுப்­ப­கு­தி­யில் நாம் இருக்­கி­றோம். அடுத்த கட்­டத்­துக்கு நாம் தயா­ராக வேண்­டும்,” என்று அமைச்­சர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!