ஏப்ரல் 1 முதல் ‘டோக்கன்’ இல்லா டிபிஎஸ் மின்னிலக்க சேவை

சிங்­கப்­பூ­ரின் பிரதான வங்­கி­களில் ஒன்­றான டிபி­எஸ், மின்­னி­லக்­கச் சேவைக்கு ‘டோக்­கன்’ சாத­னத்தை பயன்­ப­டுத்­தும் முறைக்கு முடிவு கட்­டு­கிறது.

வரும் ஏப்­ரல் 1ஆம் தேதி­யி­லி­ருந்து மின்­னி­லக்­கச் சேவை­க­ளைப் பயன்­ப­டுத்த ‘டோக்­கன்’ சாத­னம் தேவை­யில்லை என்­றும் பிப்­ர­வரி 1ஆம் தேதி­யி­லி­ருந்து அந்தச் சாத­னம் விநி­யோ­கிக்­கப்­ப­டாது என்­றும் டிபி­எஸ் அறி­வித்­துள்­ளது.

இதற்கு மாற்­றாக வங்­கி­யின் மின்­னி­லக்க டோக்­கன் முறையை பய­னீட்­டா­ளர்­கள் பயன்­ப­டுத்த வேண்­டும்.

டிபி­எஸ்­ வங்கியின் செயலி வழி­யாக இதனை அமைத்­துக் கொள்ள முடி­யும் என்று நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் டிபி­எஸ் தெரி­வித்­தது.

அனைத்து வங்கி பரி­வர்த்­த­னை­க­ளை­யும் உறுதி செய்ய இனி டோக்­கன் சாத­னம் தேவை­யில்லை.

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே டிபிஎஸ், டோக்கன் சாதனத்துக்கு மாற்றாக மின்னிலக்க டோக்கன் முறையை புகுத்திவந்தது.

இதையடுத்து வங்கியின் பயனீட் டாளர்களில் பெரும்பாலானவர்கள் மின்னிலக்க டோக்கன் முறைக்கு மாறிவிட்டனர் என்று டிபிஎஸ் தெரிவித்தது.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon