அமைச்சர் வோங்: கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம்

இவ்­வாண்­டில் கொவிட்-19 தொற்­றுக்கு எதி­ரான போரா­னது தேசிய அள­வி­லான தடுப்­பூ­சித் திட்­டத்தை விரை­வு­ப­டுத்­து­தல், பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மெரு­கேற்­று­தல் என இரு வழி­களில் இடம்­பெ­றும்.

அதாவது, சீனப் புத்­தாண்டை முன்­னிட்டு கூடு­தல் கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­ப­ட­லாம் என்று கல்வி அமைச்­ச­ரும் கொவிட்-19 தொற்­றுக்­கெ­தி­ரான அமைச்­சு­கள்­நிலை பணிக்­கு­ழு­வின் இணைத் தலை­வ­ரு­மான லாரன்ஸ் வோங் தெரி­வித்­து இருக்கிறார்.

கடந்த இரு வாரங்­க­ளாக சமூ­கத்­தில் கொரோனா தொற்று பாதிப்பு மெல்ல அதி­க­ரித்து வரு­வதை திரு வோங் சுட்­டி­னார்.

“இதே நிலை தொடர்ந்து, மேலும் எது­வும் நட­வ­டிக்கை எடுக்­கா­வி­டில், புதிய கிரு­மித்­தொற்­றுக் குழு­மங்­கள் உரு­வாகி, பின்­னர் நிலைமை நமது கட்­டுப்­பாட்டை மீறிப் போய்விடலாம்,” என்­று அமைச்சர் வோங் கூறினார்.

அத­னால், கூடு­தல் நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட வேண்­டுமா என்­பது குறித்து மிகக் கவ­ன­மாக ஆராய்ந்து வரு­கி­றோம் என்று அவர் குறிப்­பிட்­டார்.

கொரோனா தொற்று சிங்­கப்­பூ­ரில் பர­வத் தொடங்கி ஓராண்டு நிறை­வ­டை­வதை ஒட்டி அமைச்­சர் வோங்­கும் பணிக்­கு­ழு­வின் இன்­னோர் இணைத் தலை­வ­ரும் சுகா­தார அமைச்­ச­ரு­மான கான் கிம் யோங் கடந்த செவ்­வாய்க்­கி­ழ­மை­யன்று செய்­தி­யா­ளர்­க­ளைக் கூட்­டா­கச் சந்­தித்­த­னர்.

அந்த ஒன்­றரை மணி நேர நேர்­கா­ண­லின்­போது, கடந்த 12 மாதங்­களில் பணிக்­குழு எதிர்­கொண்ட சவால்­கள் உட்­பட பல்­வேறு அம்­சங்­கள் குறித்து அவர்­கள் பேசி­னர்.

அப்­போது கொரோனா தொற்­றுக்கு எதி­ரான போரில் பங்­காற்­றிய, உத­விய முன்­க­ளப் பணி­யா­ளர்­கள், தொண்­டூ­ழி­யர்­கள் மற்­றும் நிறு­வ­னங்­க­ளுக்கு அமைச்­சர்­கள் இரு­வ­ரும் நன்றி தெரி­வித்­தனர்.

கொரோனா நெருக்­க­டியை சிங்­கப்­பூர் எதிர்­கொண்ட விதம், சமூ­கத்­தின் மீட்­சித்­தன்­மையை எடுத்­துக்­காட்­டு­வ­தாக உள்­ளது என்று அமைச்­சர் கான் குறிப்­பிட்­டார்.

சிறந்த சுகா­தா­ரப் பரா­ம­ரிப்­புத் திறன்­கள், மேம்­பட்ட பரி­சோ­தனை, தொடர்­பு­க­ளின் தட­ம­றி­யும் திறன்­கள், தடுப்­பூசி நட­வ­டிக்கை எனப் பல வழி­களில் கொரோனா தொற்றை எதிர்­கொள்­வ­தில் முன்­னி­ருந்­த­தைக் காட்­டி­லும் சிங்­கப்­பூர் இப்­போது வலு­வாக இருக்­கிறது என்று அமைச்­சர் வோங் விவ­ரித்­தார்.

ஆனா­லும், உல­கின் பல நாடு­க­ளி­லும் கொரோனா பர­வல் இருப்­ப­தால் நிலைமை இன்­னும் கணிக்க முடி­யாத ஒன்­றா­கவே நீடிக்­கிறது என்­றும் அவர் சொன்­னார்.

அவ்­வ­கை­யில் பார்த்­தால், சிங்­கப்­பூர் இன்­னும் எளி­தில் பாதிக்­கப்­பட வாய்ப்­பி­ருப்­ப­தாக திரு வோங் சொன்­னார். உண்­மை­யில், ஓராண்­டிற்கு முன் நாடு எப்­ப­டி­யி­ருந்­ததோ கிட்­டத்­தட்ட அதே நிலைக்­குத் திரும்­பி­யி­ருப்­ப­தாக அவர் குறிப்­பிட்­டார்.

சிங்­கப்­பூ­ரின் பாது­காப்பு நட­வடிக்­கை­கள் தோற்­க­டிக்­கப்­பட முடி­யா­தவை அல்ல என்­றும் அவர் சொன்­னார்.

தேசிய அள­வி­லான தடுப்­பூசித் திட்­டம் நல்ல முறை­யில் இடம்­பெற்று வரு­வ­தால் முடிவு கண்­ணுக்­குத் தெரிந்­தா­லும்­கூட சிங்­கப்­பூர் இன்­னும் அதிக தொலைவு செல்ல வேண்­டி­யுள்­ளது என்­றும் தொடர்ந்து விழிப்­பு­டன் இருக்க வேண்­டும் என்­றும் அமைச்­சர்­கள் இரு­வ­ரும் வலி­யுறுத்­தி­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!