ஆயுதப்படையினருக்கு தடுப்பூசி தொடக்கம்

சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை வீரர்­களில் முதல் பிரி­வி­னர் ஜன­வரி 14ஆம் தேதி கொவிட்-19 முதல் தடுப்­பூசியைப் போட்­டுக்­கொண்­ட­னர்.

இந்த ஆண்­டின் நடுப்­ப­கு­தி­யில் பெரும்­பா­லான படை வீரர்­க­ளுக்கு தடுப்­பூசி போடு­வ­தற்­கான திட்­டம் உள்ளதாக தற்­காப்பு அமைச்சு நேற்று அறி­வித்­தது.

சிங்­கப்­பூர் ஆயு­தப்­படை தடுப்­பூசி செயல்­திட்­டத்­தின் முதல் கட்­டம், மருத்­துவ மற்­றும் கொவிட்-19 களப்­பணி ஊழி­யர்­களை இலக்­காகக் கொண்­டது.

இது ஆறு வார காலத்­தில் முடி­வ­டை­யும் என்று எதிர்­பார்க்­கப்­படு­கிறது. அந்­தக் கால­கட்­டத்­தில் இரண்­டா­வது தடுப்­பூ­சி­யும் போடப்­பட்டு இருக்­கும் என்று அமைச்சு ஃபேஸ்புக் பக்­கத்­தில் தெரி­வித்­தது.

ஆயு­தப்­ப­டை­க­ளின் பெரும்­பாலான வீரர்­க­ளுக்கு இந்த ஆண்டு நடுப்­ப­கு­தி­யில் தடுப்­பூசி போடும் திட்­டம் இருப்­ப­தாக அதே ஃபேஸ்புக் பக்­கத்­தில் தற்­காப்பு அமைச்­சர் இங் எங் ஹென் தெரி­வித்­தார்.

முக்­கி­ய­மான பாது­காப்பு நிலை­களில், கடல் மற்­றும் விமா­னத் தற்­காப்பு, பயங்­க­ர­வாத எதிர்ப்பு போன்ற பணி­களில் ஈடு­பட்டு இருக்­கும் வீரர்­க­ளுக்கு அடுத்த கட்­டத்­தில் தடுப்­பூசி போடப்­படும். பிறகு மற்­ற­வர்­க­ளுக்­கும் தடுப்­பூசி திட்­டம் விரி­வு­ப­டுத்­தப்­படும்.

புக்­கிட் கொம்­பாக்­கில் இருக்­கும் தற்­காப்பு அமைச்சு மருத்­துவ நிலை­யத்­தில் சென்ற வாரம் தற்­காப்பு அமைச்­சர் டாக்­டர் இங், தற்­காப்பு மூத்த துணை அமைச்­சர் ஸாக்கி முகம்­மது ஆகி­யோர் ஆயு­தப்­ப­டை­யின் 20 வீரர்­க­ளு­டன் சேர்ந்து தாங்­களும் தடுப்­பூசி போட்­டுக்­கொண்­ட­னர்.

இவர்­க­ளுக்கு 21 நாட்­க­ளுக்­குப் பிறகு இரண்­டா­வது ஊசி­யும் போடப்­படும்.

மருத்­துவ ரீதி­யில் தகு­தி­பெ­றும் ஆயு­தப்­படை சேவை­யா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போடப்­படும் என்று தற்காப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!