'பொறுத்திருக்க விரும்புவோருக்காக தடுப்பூசி ஒதுக்கப்படாது'

'பொறுத்திருக்க விரும்புவோருக்காக தடுப்பூசி ஒதுக்கப்படாது'

1 mins read
f30215f0-c541-4fa2-ace1-7510d11f9fea
படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

தங்­க­ளது முறை வரும்­போது தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­மல் பின்­வாங்­கு­வோ­ருக்­காக தடுப்­பூசி­கள் ஒதுக்கி வைக்­கப்­ப­டாது என்று அமைச்­சர் லாரன்ஸ் வோங் தெரி­வித்துள்ளார். மாறாக, வரி­சை­யில் அடுத்து இருப்­ப­வ­ருக்­குத் தடுப்­பூ­சி­கள் போடப்­படும்.

முடிந்த அள­விற்கு விரை­வில் அனை­வ­ருக்­கும் தடுப்­பூசி போட்டு­விட வேண்­டும் என்­பதே சிங்­கப்­பூ­ரின் இலக்கு என்று அமைச்சர் வோங் குறிப்­பிட்­டார்.

"தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ளா­தது ஒரு­வ­ரின் தனிப்­பட்ட விருப்­பம். பொறுத்­தி­ருந்து பார்க்க அவர் விரும்­பி­னால் அத­னு­டைய விளைவை அவர் ஏற்­றுக்­கொண்­டாக வேண்­டும். பின்­னர் தடுப்­பூசி போட்­டுக்­கொள்­ள­லாம் என அவர் நினைத்­தால், அப்­போது தடுப்­பூசி விநி­யோ­கம் இல்­லா­மல் போக­லாம்," என்­றார் திரு வோங்.

தேசிய அள­வி­லான தடுப்­பூசி நட­வ­டிக்கை நல்ல முறை­யில் செயல்­ப­டுத்­தப்­பட்டு வரு­கிறது. சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­கள், விமான, கடல்­து­றைப் பணி­யா­ளர்­க­ளுக்கு முன்­னு­ரிமை அளிக்­கப்­பட்டு வரு­கிறது.

திட்­ட­மிட்­ட­படி எல்­லாம் நடந்­தால் சிங்­கப்­பூ­ரர்­கள், நீண்­ட­காலக் குடி­யி­ருப்­பா­ளர்­கள் அனை­வ­ருக்­கும் 2021 மூன்­றாம் காலாண்­டிற்­குள் போது­மான தடுப்­பூ­சி­கள் கிடைத்­து­வி­டும் என்று திரு வோங் குறிப்­பிட்­டார்.