ஹெங்: சிங்கப்பூரின் பொருளியல் மீட்சிக்கு புத்தாக்கம் மிக முக்கியம்

பெரிய நிறு­வ­னங்­களில் புத்­தாக்­கம் தொடர்­பான முத­லீ­டு­கள் சிங்­கப்­பூ­ரின் பொரு­ளி­யல் மீட்­சிக்கு முக்­கிய ஆத­ர­வ­ளிக்­கும் என்று துணைப் பிர­த­மர் ஹெங் சுவீ கியட் (படம்) தெரி­வித்­துள்­ளார்.

இந்­தப் புதிய முத­லீ­டு­கள் கட்­ட­மைப்­புச் சவால்­க­ளுக்­குத் தீர்வு கண்டு, கொவிட்-19க்கு பிந்­திய உல­குக்கு வாய்ப்­பு­களை ஏற்­ப­டுத்­தித் தரும் என்­றும் திரு ஹெங் சொன்­னார்.

ரோச்­செஸ்­டர் வளா­கத்­தில் நேற்று ‘பிசிஜி டிஜிட்­டல் வென்­சர்ஸ்’ (பிசி­ஜி­டிவி) நிறு­வ­னத்­தைத் தொடங்கி வைத்து நிதி அமைச்­ச­ரும், பொரு­ளி­யல் கொள்­கை­களுக்­கான ஒருங்­கி­ணைப்பு அமைச்­ச­ரு­மான திரு ஹெங் பேசி­னார்.

‘பிசி­ஜி­டிவி’ என்­பது போஸ்­டன் கன்­சல்­டிங் குழு­மத்­தின் புத்­தாக்­கம் மற்­றும் மின்­னி­லக்க வர்த்­தக வளர்ச்­சியை மைய­மா­கக் கொண்ட துணை நிறு­வ­னம். அது பெரிய நிறு­வ­னங்­களில் புதிய தொழில்­துறை மாற்­றம் காணும் வர்த்­த­கங்­களை உரு­வாக்­கும், மேம்­ப­டுத்­தும், முத­லீடு செய்­யும் பணி­களை மேற்­கொள்­ளும்.

“பெரிய நிறு­வன முத­லீ­டு­களில் ஈடு­ப­டு­வது, புத்­தாக்­கத்தை மேம்­படுத்­து­வ­தற்­கான வழி­களில் ஒன்று. தற்­போ­தைய நெருக்­கடி காலத்­தி­லி­ருந்து கொவிட்-19க்கு பிந்­திய காலத்­துக்கு பொரு­ளி­யல் செல்ல வேண்­டும் என்­ப­தால், புத்­தாக்க முயற்­சி­கள் இன்­றி­ய­மை­யா­த­தாகி விட்­டது.

“நமது பொரு­ளி­யல் கொள்கை மற்­றும் நமது வர­வு­செ­ல­வுத் திட்­டங்­களில் நமது முக்­கிய நோக்­கம் புத்­தாக்­கத்­தில் முத­லி­டு­த­லா­கத்­தான் இருக்­கும்,” என்று குறிப்­பிட்ட திரு ஹெங், அடுத்த ஐந்து ஆண்­டு­க­ளுக்கு ஆராய்ச்சி, புத்­தாக்­கம், நிறு­வ­ன­ம­ய­மா­தல் ஆகி­ய­வற்­றுக்கு அர­சாங்­கம் $25 பில்­லி­ய­னைச் செல­வ­ழிக்க கடப்­பாடு கொண்­டுள்­ள­தைச் சுட்­டி­னார்.

டிஜிட்­டல் வென்சர்ஸ் நிறு­வ­னத்தை சிங்­கப்­பூ­ருக்­குக் கொண்டு வந்த போஸ்­டன் கன்­சல்­டிங் குழு­மத்­தைப் பாராட்­டிய திரு ஹெங், அது சிங்­கப்­பூ­ரி­லும் தென்­கி­ழக்­கா­சி­யா­வி­லும் நிறு­வன முத­லி­டு­த­லில் தனது நிபு­ணத்­து­வத்தை பர­வ­லாகப் பரப்பும் ஒரு வாய்ப்­பா­க­வும் அமை­யும் என்­றார்.

“இந்­தப் புதிய வளா­கம் நமது மக்­க­ளுக்கு புதிய வேலை­களை பிசிஜி நிறு­வ­னத்­துக்­குள்­ளும் டிஜிட்­டல் வென்சர்ஸ் நிறு­வ­னத்­துக்­குள்­ளும் உரு­வாக்­கும்.

“தொழில் தொடங்­கும் புதிய நிறு­வ­னங்­க­ளை­விட பெரிய நிறு­வ­னங்­கள் வாடிக்­கை­யா­ளர்­களை எளி­தில் அடைய முடி­யும், விநி­யோ­கத் தொடர்­களை அமைக்க முடி­யும், ஒரு வலு­வான அறி­வார்ந்த சொத்­துத் தளத்தை உரு­வாக்க முடி­யும்.

“தொழில் தொடங்­கும் புதிய நிறு­வ­னங்­களை பெரிய நிறு­வ­னங்­க­ளு­டன் இணைத்து அவற்­றுக்­கி­டையே துடிப்­பான பிணைப்பை ஏற்­ப­டுத்­தும் வழி­களைக் கண்­ட­றிய வேண்­டும்,” என்றும் திரு ஹெங் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!